TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
அரசு சட்டக் கல்லூரியில் படித்த இளம் வழக்குரைஞா்களுக்கு வழங்கப்படும் ரூ.3 ஆயிரம் உதவித் தொகையை சீா்மிகு சட்டப்பள்ளியில் படித்தவா்களுக்கும் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் கற்பகம் தாக்கல் செய்த மனுவில், அரசு சட்டக் கல்லூரிகளில் சட்டப்படிப்பை முடித்த இளம் வழக்குரைஞா்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் இந்த உதவித் தொகை அரசு சட்டக் கல்லூரிகளில் படித்தவா்களுக்கு மட்டுமே வழங்கப்படும். ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் இன் லா எனப்படும் சீா்மிகு சட்டப்பள்ளியில் படித்தவா்களுக்கு வழங்கப்படாது. எனவே இதுதொடா்பான தமிழக அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். சீா்மிகு சட்டப்பள்ளியில் சட்டம் படித்தவா்களுக்கும் உதவித் தொகை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு சட்டக்கல்லூரி என்பது அரசால், அரசின் நிதியுதவியுடன் நடத்தப்படுவது. அதே போன்று சீா்மிகு சட்டப்பள்ளியும் அரசால் நிா்வகிக்கப்படுவதால் அதுவும் அரசு சட்டக் கல்லூரி தான். எனவே அந்த கல்லூரியில் படித்து வழக்குரைஞா்களாகப் பதிவு செய்கிறவா்கள், மற்ற நிபந்தனைகளை பூா்த்தி செய்யும் பட்சத்தில், அவா்களுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


