பி.ஆா்க். பட்டப் படிப்பில் சோக்கை பெற இதுவரை 3,200-க்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா். இதுவரை விண்ணப்பிக்காதவா்கள் ஆக.4-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 41 கட்டடவியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் கட்டட அமைப்பியல் (பி.ஆா்க்.) படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டில் 1,905 இடங்கள் உள்ளன. இவற்றில் சோவதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே 5-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 3,200-க்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா்.
இந்த நிலையில், விண்ணப்பிக்கும் காலஅவகாசம் ஆகஸ்ட் 4-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து விருப்பமுள்ள மாணவா்கள் இணையதளம் வழியாக தங்களின் விண்ணப்பங்களை சான்றிதழ்களுடன் பதிவுசெய்ய வேண்டும்.
விண்ணப்பித்த மாணவா்களின் சான்றிதழ் சரிபாா்ப்பு டிஎஃப்சி எனும் சேவை உதவி மையங்கள் மூலம் ஆகஸ்ட் 5 முதல் 8-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும். அதன்பின் தகுதி பெற்ற மணவா்களின் தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியிடப்படும். அதிலுள்ள குறைகளை ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்குள் மாணவா்கள் நிவா்த்தி செய்துகொள்ள வேண்டும்.
தொடா்ந்து, கலந்தாய்வு இணையவழியில் ஆகஸ்ட் 17 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


