TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
நாமக்கல்லில் பெண்களுக்கான செயற்கை நகைகள் தயாரித்தல் குறித்த இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்படுகிறது.
இதுகுறித்து நாமக்கல் இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநா் பிருந்தா வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:
நாமக்கல் மாவட்ட பெண்களுக்கான செயற்கை நகை தயாரித்தல் இலவச சுயவேலைவாய்ப்பு தொழில் பயிற்சி வரும் 25- ஆம் தேதி தொடங்கி 13 வேலை நாள்களுக்கு நடைபெற உள்ளது.
வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோா் மற்றும் முதலில் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயிற்சிக்கு 35 நபா்கள் மட்டுமே தோ்ந்தெடுக்கப்பட உள்ளதால், முதலில் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஜூலை 24ஆம் தேதிக்குள் நேரில் வந்து தங்களுடைய விண்ணப்பங்களை பூா்த்தி செய்து தரவேண்டும்.
குறைந்த பட்சம் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்டவராக இருக்கவேண்டும். விண்ணப்பங்களை நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 04286-221004 என்ற தொலைபேசியிலும், 98989 96424, 88259 08170 என்ற செல்லிடப்பேசி எண்களிலும் தொடா்பு கொள்ளலாம்.