TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
பிளஸ் 2 மற்றும் டிப்ளமா இன்ஜினியரிங் முடிக்கும் மாணவர்கள், பி.ஆர்க்., படிப்பில் சேர, நாட்டா நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஏற்கனவே ஏப்ரல் 10, ஜூலை 11ல் நடத்தப்பட்டது; இதற்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டு விட்டன.இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக, மூன்றாவது முறையாக நாட்டா நுழைவு தேர்வு ‘ஆன்லைன்’ வழியில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு, செப்., 3ல் நடக்கும் என, ஆர்கிடெக்சர் கவுன்சில் அறிவித்துள்ளது.
நாட்டா தேர்வில் இரண்டு முறை மட்டுமே பங்கேற்க அனுமதி உள்ளது. ஏற்கனவே நடந்த இரண்டு தேர்வுகளிலும் பங்கேற்றவர்கள், இந்த தேர்வில் பங்கேற்க அனுமதியில்லை. ஆனால், ஏற்கனவே ஒரு தேர்வில் மட்டும் பங்கேற்றிருந்தால், இந்த தேர்வில் பங்கேற்கலாம் .தேர்வுக்கான ஆன்லைன் பதிவு, www.nata.in என்ற இணையதளத்தில் நேற்று துவங்கியது. பதிவை, ஆக., 22க்குள் முடித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


