HomeBlog11 பிராந்திய மொழிகளில் பொறியியல் பாடங்கள்

11 பிராந்திய மொழிகளில் பொறியியல் பாடங்கள்

11 பிராந்திய மொழிகளில் பொறியியல் பாடங்கள்

புதிய
தேசியக் கல்விக் கொள்கையின் கீழ், 11 பிராந்திய மொழிகளில் பொறியியல் பாடங்கள் விரைவில்
கற்பிக்கப்படும் என
பிரதமர் நரேந்திர மோடி
அறிவித்தார்.

இந்தியாவில் 1986-ம் ஆண்டு
வடிவமைக்கப்பட்ட தேசிய
கல்விக் கொள்கைக்கு மாற்றாக,
புதிய தேசிய கல்விக்
கொள்கையை மத்திய அரசு
கடந்த 2020-ம் ஆண்டு
ஜூலை மாதம் அறிமுகப்படுத் தியது. தாய்மொழி வழியில்
உயர்கல்வி, 4 ஆண்டு இளநிலை
படிப்பு, கல்லூரியில் தேர்ந்தெடுத்த பாடத்தை பாதியிலேயே மாற்றிக்
கொள்ளும் வாய்ப்பு உள்ளிட்ட
பல்வேறு அம்சங்கள் இதில்
இடம்பெற்றிருந்தன.

இந்த
தேசிய கல்விக் கொள்
கைக்கு ஒருபுறம் வரவேற்பு
கிடைத்த போதிலும், மறுபுறம்
எதிர்ப்புகளும், விமர்சனங்களும் எழுந்தன. புதிய கல்விக்
கொள்கை யில் இடம்பெற்றிருக்கும் சில அம்சங்களுக்கு பல்வேறு மாநிலங் களில்
பலத்த எதிர்ப்பும் காணப்
பட்டது.

இந்நிலையில், புதிய தேசிய கல்விக்
கொள்கையை அறிமுகப் படுத்தி
ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து
நாட்டு மக்களிடம் பிரதமர்
நரேந்திர மோடி காணொலி
காட்சி மூலம் நேற்று
உரையாற்றினார்.

அவர் கூறியதாவது:

ஒரு
நாடு அனைத்து துறை
களிலும் முன்னேறவேண்டுமானால் அந்நாட்டு
இளைஞர் களுக்கு தரமான
கல்வி கிடைக்க வேண்டியது
அவசியம். இதை கருத்
தில்கொண்டு உருவாக்கப்பட்டதே நமது
புதிய தேசிய கல்விக்
கொள்கை ஆகும். இந்தக்
கொள்கையை பல சோதனைகளை
கடந்து வகுத்துத் தந்த
கல்வியாளர்களுக்கு இந்த
தருணத்தில் நன்றி கூற
கடமைப் பட்டிருக்கிறேன்.

நமது
மாணவர்கள் மாற்றங்களை ஏற்க
எப்போதும் தயாராக இருக்கிறார்கள். கரோனா காலகட்டத்தில் பள்ளி,
கல்லூரிகளுக்கு செல்ல
முடியாத சூழல் எழுந்தபோது, ஆன்லைன் கல்வி முறைக்கு
அவர்கள் உடனடியாக தங்களை
தகவமைத்துக் கொண்டனர். அந்த
வகையில், கல்விக் கொள்கையில் கொண்டு வரப்பட்டிருக்கும் மாற்றங்களை அவர்கள் எளிதில் ஏற்றுக்
கொள்வார்கள். பள்ளி,
கல்லூரி படிப்புகளில் பின்பற்றப்படும் பழமையான முறையை புதுப்பிப்பதே இந்த கல்விக் கொள்கையின் அடிப்படை நோக்க மாகும்.
மாணவர்களுக்கு கல்வியை
மட்டும் புகட்டாமல், அவர்களுக்கு இயற்கையாகவே அமைய பெற்றிருக்கும் திறமை களை கண்டறிந்து வெளிக்கொணரும் வகையில்
இந்த புதிய கல்விக்
கொள்கை வடிவமைக் கப்பட்டிருக்கிறது.

எப்பொழுதுமே வேற்று மொழியில் ஒரு
விஷயத்தை புரிந்து கொள்வதைவிட, தனது தாய்மொழியில் படித்து
புரிந்து கொள்வது மிகவும்
எளிமையாக இருக்கும். எனவே,
இதுவரை ஆங்கிலத்தில் மட்டுமே
இருந்த பொறியியல் பாடங்கள்
விரை வில் 11 பிராந்திய
மொழிகளில் கற்பிக்கப்பட உள்ளன.
இது, ஏழைஎளிய,
தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாண வர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தாய்மொழியில் பொறி
யியல் பாடங்களை படிப்பது,
மாணவர்களின் ஆராய்ச்சித் திறனை
மேலும் தூண்டிவிடும். தற்போது
புதிய கல்விக் கொள்கையின் கீழ் 8 மாநிலங்களில் உள்ள
14
பொறியியல் கல்லூரிகளில் தமிழ்,
தெலுங்கு, இந்தி, மராத்தி,
வங்காளம் ஆகிய 5 மொழிகளில் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

மாணவர்களுக்கு சுதந்திரம்:

புதிய
கல்விக் கொள்கையானது மாணவர்களுக்கான அழுத்தங்களை முற்றிலும் போக்கும்
வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக,
கல்லூரியில் ஒரு குறிப்பிட்ட படிப்பை தேர்ந் தெடுக்கும் மாணவர், அந்தப் படிப்பு
பிடிக்கிறதோ இல்லையோ, கடைசி
வரை அதைத்தான் படிக்க
வேண்டும் என்ற விதிமுறை
இப்போது இருக்கிறது. ஆனால்,புதிய
கல்விக் கொள்கையில், இந்த
விஷயத்தில் மாணவர்களுக்கு பெரிய
அளவில் சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, உயர்கல்வியில் ஒரு படிப்பை தவறாக
தேர்ந்தெடுத்து விட்டோம்
என மாணவர்கள் கருதினால்,
உடனடியாக வேறு பாடத்தை
அவர்கள் தேர்ந்தெடுத் துக்
கொள்ளலாம். இது, மாணவர்களுக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதம் ஆகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular