ஐடிஐ பயின்றவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சிக்கான நேர்காணல்
கோவை
மின்சார வாரியத்தில், ஐடிஐ
கல்வி பயின்றவர்களுக்கான தொழில்பழகுநர் பயிற்சிக்கான நேர்காணல்
கோவையில் வரும் ஆகஸ்ட்
4-ஆம் தேதி நடைபெற
உள்ளது.
இதுதொடர்பாக கோவை மின்பகிர்மான வடக்கு வட்ட மேற்பார்வை பொறியாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஓராண்டு
கால ஐடிஐ தொழில்பழகுநர் பயிற்சிக்கு 70 வயர்மேன், எலெக்ட்ரீஷியன்கள் தேர்வு செய்யப்பட
உள்ளனர். இந்த நேர்காணல்
நடத்துவதற்காக கோவை
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து 350 பேரின் பெயர்ப்பட்டியல் பெறப்பட்டுள்ளது. அப்பட்டியலில் உள்ள அனைவருக்கும் நேர்காணல்
கடிதங்கள் அனுப்பப்பட்டு, அரசு
விதிமுறைகளுக்குட்பட்டு தகுதியின்
அடிப்படையில் தேர்வு
செய்யப்பட உள்ளனர்.
கோவை
டாடாபாத் பகுதியில் அமைந்துள்ள மின்வாரிய அலுவலகத்தில் நடைபெற
உள்ள இந்த நேர்காணலில், கல்விச் சான்றிதழ்கள், மாற்றுச்
சான்றிதழ், சாதிச் சான்று,
வேலைவாய்ப்பு அலுவலக
அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி சான்று ஆகியவற்றின் அசல்
மற்றும் நகல்களுடன் கலந்துகொள்ள வேண்டும். ஏற்கெனவே தொழில்பழகுநர் பயிற்சியை தமிழ்நாடு மின்சார
வாரியத்தில் மேற்கொண்டவர்கள் நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டாம்.