மத்திய பல்கலைகளில் OBC பணியிடங்கள் 55% காலியாக
உள்ளன
மத்திய
பல்கலைக்கழகங்களில் இதர
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்களில் 55% காலியாக இருப்பதாக மத்திய
கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இது
தொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அவர்
அளித்த பதிலில், 45 மத்திய
பல்கலைக்கழகங்களில் எஸ்.சி
பிரிவினருக்கான இடங்களில்
38 புள்ளி 71 சதவிகிதமும், எஸ்.டி
பிரிவில் 41 புள்ளி 64 சதவிகிதமும் பணியிடங்கள் காலியாக இருப்பதாக
தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் ஒபிசி பிரிவனருக்கான பணியிடங்களில் 55 சதவிகிதம் காலியாக உள்ளன
என அவர் குறிப்பிட்டுள்ளார்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
தற்போது
OBC இடஒதுக்கீடு அனைத்து
மட்டங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழகங்களில் காலியிடங்களை நிரப்புவதற்கான வழிகாட்டுதல்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


