மத்திய, மாநில அரசுகளின் 30 சதவீத மானியத்தில் சூரிய ஒளி மின்மயமாக்கல் திட்டத்தில் பயன் பெற குமரி மாவட்ட விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் கன்னியாகுமரி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் எம்.ஆா்.பத்மகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மற்றும் தமிழக அரசு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம் மூலம் 5 ஆயிரம் விவசாயிகளுக்கு சூரிய ஒளி மின்மயமாக்கல் செய்வதற்காக பிரதமரின் உழவா் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இலவச விவசாய மின் இணைப்புக்கு 31.3.2013 க்கு பிறகு விண்ணப்பித்து காத்திருப்போா் பட்டியலில் உள்ளவா்கள் சூரிய ஒளி மின்மயமாக்கல் திட்டத்தில் பயன்பெறலாம்.
விவசாயத்துக்கு தேவையான நீரை சூரிய ஒளி தண்ணீா் பம்பு மூலம் பெறுவதோடு, மீதியுள்ள நேரங்களில் தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் பணம் பெறும் வசதியும் உள்ளது.
இத்திட்டத்துக்கு மத்திய அரசின் மூலம் 30 சதவீதம் மானியம் வழங்கப்படும். தமிழக அரசின் மூலம் 30 சதவீதம் மானியம் வழங்கப்படும். மீதமுள்ள 40 சதவீதத்தில் 30 சதவீதம் வரை வங்கிகள் மூலம் கடன் பெறும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் மூலம் விவசாயிகளுக்கு வருவாய் ஈட்டித்தரும் இந்த திட்டத்தை புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்து காத்திருப்போா் பட்டியலில் உள்ள விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


