பெண்களுக்கு பொக்லேன்
வாகன ஓட்டுநர் பயிற்சி
பெண்களுக்கான வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் கோவையில் மகேந்திரா
& மகேந்திராவின் அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தர் சாரு
சிண்டிகேட், தமிழகத்தின் முதல்
பெண் பொக்லைன் வாகனம்
இயக்கும் பெண் ஓட்டுநரை
அறிமுகப்படுத்துகிறது. மேலும்
இந்தக் குழு தமிழகம்
முழுவதும் கனரக வாகனங்களை
கையாளும் துறையில் 100க்கும்
மேற்பட்ட பெண்களுக்கு பயிற்சி
அளித்து வருகிறது.
சாரு
சிண்டிகேட் பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது தமிழகத்தின் முதல்
பொக்லின் வாகனம் ஆப்பரேட்டர் திருமதி.அங்காள ஈஸ்வரி
அவர்கள். பெண்கள் சாதிக்க
வேண்டும் என்ற நோக்குடன்
கடின உழைப்பைக் கொண்டு
இதனை கற்றுக் கொண்டுள்ளார்.மிகவும் ஆர்வமுடன் பயிற்சியில் ஈடுபட்டார் .எதிர்காலத்தில் ஒரு
நட்சத்திரமாக வலம்
வருவார். பெண்கள் எதையும்
சாதிக்க முடியும் என்று
நிரூபித்துள்ளார். சமூகத்தில் பெரிய நிலைக்கு வர
வேண்டும் என்று விரும்பும் பெண்களுக்கு இவர் ஒரு
சிறந்த உதாரணமாக திகழ்கிறார்.
பெண்
தொழில்முனைவோர் திருமதி.ருக்மணி
சாமியப்பன் மற்றும் திருமதி.பாரதி
சக்தி பாலாஜி அவர்கள்
பெண்கள் முன்னேற்றத்தை பற்றி
பேசுகையில், பொக்லைன் வாகனம்
ஆப்ரேட்டர் வேலைக்கு அதிக
அளவு பெண்களுக்கு பயிற்சி
அளித்து வருகிறோம். இதன்
மூலம் பெண்களை சமூகத்தில் உயர்த்த ஒரு காரணியாக
அமைகிறது.
வீட்டு
வேலை மட்டுமே செய்து
வரும் பெண்களை அவர்கள்
விருப்பப்படி அவர்களுக்கு பிடித்த வேலையை செய்ய
தூண்டும் என்று நினைத்தோம். தொழில் முனைவோர்களில் மூன்றில்
ஒரு பங்கு பெண்
தொழில் முனைவோர்கள் நடத்தப்படுகிறது. பொருளாதார முன்னேற்றம், கல்வி,
நகரமயமாதல், கலாச்சாரம் மற்றும்
சமூகத்தின் அங்கீகாரம் ,ஆகியவற்றின் காரணமாக இந்தியாவில் பெண்
தொழில் முனைவோர்கள் அதிகரித்துள்ளனர்.
சாரு சிண்டிகேட் பற்றி:
சாரு சிண்டிகேட், பெண் தொழில் முனைவோர்களால் திருமதி.ருக்மணி சாமியப்பன் மற்றும் திருமதி.பாரதி சக்தி பாலாஜி ஆகியோரால் துவங்கப்பட்டது.சாரு சிண்டிகேட் இந்தியாவின் முக்கியமான கட்டுமான உபகரண நிறுவனங்களில் ஒன்றாகும். தமிழகத்தில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர் மற்றும் நீலகிரி ஆகிய ஆறு மாவட்டங்களில் வளர்ச்சி அடைந்துள்ளது.
சாரு சிண்டிகேட் பிரைவேட் லிமிடெட் அங்கீகாரம் பெற்ற மகேந்திரா & மகேந்திரா மற்றும் மேகான்ஸ் கட்டுமான உபகரணங்களை விநியோகிக்கும் நிறுவனமாகும்.கோயம்புத்தூரில் எங்கள் நிறுவனம் 3 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. எங்கள் வாடிக்கையாளர்களால் எங்கள் நிறுவனம் குறுகிய காலத்தில் அதிக வளர்ச்சியை அடைந்துள்ளது. வாடிக்கையாளர்களுடனானை உறவு எங்களின் வெற்றிக்கு முதன்மையானதாக நாங்கள் கருதுகிறோம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


