எம்பிஏ, எம்சிஏ,
எம்எஸ்சி கலந்தாய்வு – ஆன்லைன்
விண்ணப்பம் தொடக்கம்
அண்ணா
பல்கலை.யின் தொலைதூரக்
கல்வி மையத்தில் எம்பிஏ,
எம்சிஏ படிப்புகளுக்கான மாணவர்
சேர்க்கை ‘டான்செட்’ தேர்வு
அல்லது தொலைதூரக் கல்விக்கான நுழைவுத் தேர்வுமூலம் நடைபெறும்.
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தொலைதூர கல்வி
மையத்தின்சார்பாக எம்பிஏ,
எம்சிஏ, எம்எஸ்சி (சிஎஸ்)
படிப்புக்கான சேர்க்கை
கலந்தாய்வுக்கு விண்ணப்பம் தற்போது தொடங்கப்படுகிறது. அதன்படி,
எம்பிஏ, எம்சிஏ–க்கு
தகுதி உள்ள மாணவர்கள்
https://cdefee.annauniv.edu/ என்ற
இணையதளம் மூலமாக விண்ணப்பத்தைப் பதிவிறக்கி, பூர்த்தி செய்து
உரிய சான்றிதழ்களுடன் நவ.31-ம்
தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
எம்எஸ்சி
படிப்புக்கான விண்ணப்பத்தை டிச.3-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், எந்த
நுழைவுத் தேர்வும் எழுதாத
மாணவர்கள் டிச.5-ல்
நடைபெறும் நுழைவுத் தேர்வில்
கலந்து கொள்ளலாம். அதற்கான
விண்ணப்பமும் இணையதளத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து கலந்தாய்வு டிசம்பர் 11, 12 ஆகிய தேதிகளில்
நடைபெறும். இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.
அண்ணா
பல்கலை. தொலைதூர கல்வித்
திட்டத்தின் கீழ் பயிலும்மாணவர்களுக்கு, நவம்பர்–டிசம்பர்
மாத பருவத் தேர்வுகளுக்கான கட்டணத்தை ஆன்லைனில் ஆக.18வரை
செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு 044–22357225 என்றஎண்ணை தொடர்பு
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


