தபால் உறை
வடிவமைப்பு போட்டியில் பங்கேற்க
அழைப்பு
தமிழக
தபால்துறை சார்பில் சிறப்பு
தபால் உறை வடிவமைப்பு போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கொரோனா
தடுப்பூசி‘ என்று தலைப்பில்
நடக்கும் ஓவியப்போட்டியில், 6 முதல்,
12 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம். ஓவியங்கள் ஏ4 அளவிலான
காகிதத்தில் இருக்க வேண்டும்.
குழந்தைகள் தங்கள் வீட்டிலேயே வசதியான நேரத்தில் ஓவியங்களை
வரையலாம். நுழைவு கட்டணமாக,
200 ரூபாய் வங்கி காசோலை
மூலம் செலுத்த வேண்டும்.தபால்துறைக்கு கிடைத்ததும், சேர்க்கை எண்கள்
பங்கேற்பாளருக்கு அனுப்பி
வைக்கப்படும். பின்
ஓவியத்தை ஸ்கேன் செய்து,
doannaroadhpo.tn@indiapost.gov.in
எனும் Email முகவரிக்கு ஆக 31க்குள் அனுப்பி
வைக்கவும்.
ஒருவர்
ஓர் ஓவியத்தை மட்டுமே
அனுப்ப வேண்டும். வெற்றி
பெறும் குழந்தைகளுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்படும்.செலுத்தப்படும் நுழைவு கட்டணம், செலுத்தபவரின் பெயரில் புதிய தபால்தலை
கணக்கில் வரவு வைக்கப்படும். அல்லது பங்கேற்பாளரின் பெயரில்
ஏற்கனவே தபால்தலை கணக்கு
இருந்தால் அவர்களின் கணக்கில்
வரவு வைக்கப்படும். விண்ணப்பத்தை, ‘தலைமை தபால் அதிகாரி‘
சிறப்பு தபால்தலை மையம்,
அண்ணாமலை தலைமை அஞ்சலகம்,
சென்னை -2′ என்ற முகவரிக்கு விரைவு தபால் அல்லது
பதிவுத்தபால், வரும்,
28ம் தேதிக்குள் அனுப்ப
வேண்டும்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


