HomeBlogதமிழக அரசு அறிவிப்பு 1 முதல் 12 வரை பாடத்திட்டம் குறைப்பு

தமிழக அரசு அறிவிப்பு 1 முதல் 12 வரை பாடத்திட்டம் குறைப்பு

Curriculum reduction from 1 to 12 announced by the Government of Tamil Nadu

தமிழக அரசு
அறிவிப்பு 1 முதல் 12 வரை
பாடத்திட்டம் குறைப்பு

கொரோனா
தொற்று காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால், மாணவர்கள் படிப்பதற்கு வசதியாக,
1
முதல் 8ம் வகுப்பு
வரை 50 சதவீதமும், 9ம்
வகுப்பு முதல் பிளஸ்
2
வகுப்பு வரையுள்ள பாடத்திட்டத்தில் 35 சதவீத பாடப்பகுதிகளும் குறைக்கப்பட்டுள்ளதாக தமிழகஅரசு
அறிவித்துள்ளது. கொரோனா
தொற்று பரவியதை அடுத்து
கடந்த ஆண்டு மார்ச்
25
ம் தேதி முதல்
தமிழகத்தில் அனைத்து வகை
பள்ளிகள், கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டன. படிப்படியான ஊரடங்கு
அறிவிக்கப்பட்டதை அடுத்து
சுமார் 9 மாதங்கள் பள்ளிகள்,
கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தன.

இந்நிலையில், 2021-ஆம் ஆண்டில்
ஜனவரி மாதம் பள்ளிகளில் சில வகுப்புகளை மட்டும்
நடத்தலாம் என்று அரசு
முடிவு செய்து  முதற்கட்டமாக பிளஸ்
2
வகுப்புகள் மட்டும்  நடத்தப்பட்டன. அதேபோல,
பத்தாம் வகுப்பும் நடத்தப்பட்டன. பொதுத் தேர்வு எழுத
வசதியாக இந்த ஏற்பாடு
செய்யப்பட்ட நிலையில், கடந்த
மார்ச் மாதம் கொரோனா
இரண்டாவது அலை பரவியதால்,
வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. இருப்பினும் பொதுத் தேர்வுகள்
மே மாதம் நடத்த
திட்டமிட்டு இருந்தும், அதை
நடத்த 
முடியாத அளவுக்கு கொரோனா
தொற்றின் பாதிப்பு தீவிரம்
அடையத் தொடங்கியது.

அதனால்
பொதுத் தேர்வுகளும் ரத்து
செய்யப்பட்டு அனைத்து
மாணவர்களும் தேர்ச்சி என்று
அரசு அறிவித்தது. இதற்கான
தேர்வு 
முடிவுகள் கடந்த மாதம்
வெளியிடப்பட்டது. தற்போது,
கொரோனாவின் தீவிரம் குறையத்
தொடங்கியதை அடுத்து ஆகஸ்ட்
16
ம் தேதி முதல்
மருத்துவக் கல்லூரிகளும், செப்டம்பர் 1ம் தேதி  முதல் 9ம்
வகுப்பு முதல் பிளஸ்
2
வகுப்புகளுக்காக பள்ளிகள்
திறக்கப்படும் என்றும்
அரசு அறிவித்தது. இதையடுத்து, தற்போது அரசு, அரசு
உதவி பெறும் பள்ளிகள்,
தனியார் பள்ளிகள் மேற்கண்ட
வகுப்புகளை தொடங்க அனைத்து
நடவடிக்கைகளையும் எடுத்து
வருகின்றன. மீதம் உள்ள
வகுப்புகளை சேர்ந்த மாணவ,
மாணவியர் ஆன்லைன் மூலம்
தங்கள் பாடங்களை படித்து
வருகின்றனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு, பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் மாணவர்கள் கல்வி  ஆண்டின் முழு
பாடங்களையும் எப்படி
படிக்க முடியும் என்று
கேள்வி எழுந்தது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இதுகுறித்து பள்ளிக் கல்வி
ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

பள்ளிக்
கல்வித்துறையின் கீழ்
இயங்கும் பள்ளிகளில் ஒரு
கல்வி ஆண்டு என்பது
பொதுவாக ஜூன் மாதம்
தொடங்கி அடுத்த ஆண்டு
ஏப்ரல் மாதம் வரை
இருக்கும். அதில் வேலை
நாட்கள் என்பது 210 நாட்கள்.
அதில் 136 நாட்கள் கற்பித்தலுக்கான நாட்களாக இருக்கும். கடந்த
2020-21
ம் கல்வி ஆண்டில்
மேற்கண்ட கற்பித்தலுக்கான நாட்களில்
குறைந்த அளவிலான நாட்களில்
தான் மாணவர்கள் கற்பித்தலில் ஈடுபட்டனர். இந்நிலையில், கொரோனா
தொற்று காரணமாக அரசு
ஊரடங்கு அறிவித்ததால், பள்ளிகள்
மூடப்பட்டன. அதைத் தொடர்ந்து
பள்ளிக்கல்வித்துறை ஆன்லைன்
மூலம் பாடங்களை நடத்த
ஏற்பாடு செய்தது.

ஆனால்
ஆன்லைன் மூலம் பாடங்கள்
கற்பதில், பள்ளிகளில் நேரடியாக
ஆசிரியர்களிடம் பாடம்
கற்றல் கேட்டல் அனுபவம்
கிடைக்கவில்லை என்ற
குறை கடந்த ஆண்டு
முழுவதும் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த கல்வி ஆண்டில்
(2021-2022)
ஜூன் மாதம் தொடங்க
வேண்டிய பள்ளிகள் கொரோனா
தொற்று தீவிரம் காரணமாக
திறக்கப்படவில்லை. அதனால்
மாணவர்களால் இந்த கல்வி
ஆண்டுக்கான முழுப்பாடத்திட்டத்தையும் படிக்க
முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி
நிறுவனத்தின் மூலம்
கடந்த ஆண்டில் குழு
அமைக்கப்பட்டு, பாடத்திட்டத்தில் முக்கியத்துவம் கொடுக்க
வேண்டிய பகுதிகள், மாற்று
பாடப் பகுதிகள் எவை
என்று ஆய்வு செய்யப்பட்டது.

மேற்கண்ட  குழுவின் பரிந்துரைகள், ஆலோசனைகளை ஏற்று 1ம்
வகுப்பு முதல் பிளஸ்
2
வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் சில பகுதிகளை
குறைக்கவும், அதே நேரத்தில்
அனைத்து பாடங்களும் இடம்
பெற வேண்டிய வகையில்
பாடப்பகுதிகள் சுருக்கப்பட்டன. கடந்த ஆண்டு தேர்வுகள்
ரத்து செய்யபட்டதை அடுத்து,
மாணவர்கள் முழு பாடப்பகுதிகளை படிக்க முடியாத நிலை
ஏற்பட்டதால் இந்த ஆண்டுள்ள
பாடங்களை புரிந்து கொள்வது
கடினமாக 
இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த ஆண்டுக்கான பாடப்பகுதிகளை எளிதில் 
புரிந்து கொள்ளும் வகையிலும்,
இதுவரை ஏற்பட்ட இடைவெளியை
நிரப்பும் வகையிலும் மாணவர்களுக்கு இரண்டு கல்வி ஆண்டு
பாடங்களையும் இணைத்து
வழங்கும் வகையில் புத்தாக்க
படிப்பு மற்றும் இணைப்பு
வகுப்புகளை 45 நாட்கள் முதல்
50
நாட்களுக்கு நடத்த பள்ளிக்
கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதனால் இந்த கல்வி
ஆண்டில் (2021-22) உள்ள
கற்றல் நாட்களில் 1 முதல்
8
ம் வகுப்பு வரை
உள்ள மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் 50 சதவீதம்  முதல் 54 சதவீதம்
வரையும், 9ம் வகுப்பு
முதல் பிளஸ் 2 வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் 60 சதவீதம் முதல்
65
சதவீதம் வரையும் முக்கியத்துவம் கொடுத்து பாடம் நடத்த
வேண்டும் என்று முடிவு
செய்துள்ளது. இதன்படி, 1 முதல்
8
ம் வகுப்புக்கு 50 சதவீதமும்,
9
ம் வகுப்பு முதல்
பிளஸ் 2 வகுப்புகளுக்கு 35 சதவீதம்
வரையும் பாடத்திட்டம் குறைகிறது.

இதன்படி,

பள்ளிகள்
திறக்கும் போது 45 முதல்
50
நாட்களுக்கு 
அனைத்து வகுப்புகளுக்கும் புத்தாக்க
வகுப்புகள், இணைப்பு வகுப்புகள் நடத்த வேண்டும்.

கடந்த
கல்வி ஆண்டில் (2020-2021) முன்னுரிமை கொடுத்து அனுமதிக்கப்பட்ட பாடத்திட்டத்தை, இந்த கல்வி ஆண்டிலும்
நடத்த வேண்டும்.

முன்னுரிமை கொடுத்த பாடப்பகுதிகள் அனைத்து
பள்ளிகளுக்கும் அனுப்ப
வேண்டும்.

மேற்கண்ட
முன்னுரிமை அளிக்கப்பட்ட பாடப்பகுதிகள் தான் தேர்வில் இடம்
பெறும் என்று மாணவர்களுக்கு அறிவிக்க வேண்டும்.

மற்ற
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும்
மாணவர்கள் அவற்றுக்கான பாடப்பகுதிகளை தாங்களே படித்துக் கொள்ள
வேண்டும். இவ்வாறு அறிவிப்பில் கூறியுள்ளார்.

வகுப்பு  வாரியாக குறைக்கப்பட்ட பாடப் பகுதியின் % அளவீடு

வகுப்பு    சதவீதம்(%)

1   
50%

2   
50%

3   
51%

4   
51%

5   
52%

6   
53%

7   
54%

8   
54%

9   
62%

10    
61%

11   
60-65%

12   
60-65%

புத்தாக்க பயிற்சி வகுப்புகள் விவரம்

காலம்

(2021-2022)    பணி நாட்கள்    கற்றல்

நாட்கள்    வகுப்புகள்    சதவீதம்

ஜூன்ஏப்ரல்    210   
136    1088    100

செப்ஏப்ரல்    195   
144    776    71

அக்மே    195   
146    792    72

நவம்ஜூன்    199   
148    776    71

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!