நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வு பிரிவின் வாயிலாக UPSC முதல்நிலை தேர்வுக்கான ஊக்கத்தொகைக்காக நடத்தப்படும் மதிப்பீட்டுத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இதன் மூலம் 1000 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஊக்கத்தொகையாக ₹7,500 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும் – தமிழக அரசு
இதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். https://naanmudhalvan.tn.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
மதிப்பீட்டுத் தேர்வு:
UPSC முதல்நிலை தேர்வின் ஊக்கதொகைக்கான மதிப்பீட்டுத் தேர்வை 10.09.2023 அன்று நடத்தப்பட உள்ளது. இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் 7500 ரூபாய் விதம் 10 மாதங்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.
ஏற்கனவே அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் கீழ் இயங்கி வரும் அகில இந்திய குடிமை பணிகள் பயிற்சி மையங்களுக்கான (ஆர்.ஏ புரம் சென்னை, பாரதியார் பல்கலைக்கழகம் கோவை மற்றும் காமராஜர் பல்கலைக்கழகம் மதுரை) நுழைவுத் தேர்வும் இதில் ஒருங்கிணைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மதிப்பீட்டுத் தேர்வை எழுதி ஊக்கத்தொகை பெற விரும்பும் ஆர்வமுள்ள மாணவர்கள் https://naanmudhalvan.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விரிவான அறிவிக்கையைப் படித்து பார்த்து, நாளை (02.08.2023 அன்று) முதல் விண்ணப்பிக்கலாம்.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.08.2023
Apply Link: Apply Here
Notification PDF
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram




