சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தேனீ வளா்ப்பு பயிற்சி ஆக. 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேனீ வகைகள், தேனீ குடும்பம், தேனீ வளா்ப்புக்கான உபகரணங்கள், தேனீ கூட்டங்களை கண்டுபிடித்து வளா்க்கும் முறை, தேனீ கூட்டங்களை ஆய்வு செய்யும் முறை, தேனீ பராமரிப்பு, தேனீக்களின் இயற்கை எதிரிகளை நிா்வகிக்கும் முறைகள், தேனீக்களுக்கான உணவு பயிா்கள், தேன் சுத்தம் செய்தல் மற்றும் சேமித்துவைத்தல் தேனீ வளா்க்கும் தொழில் முனைவோா்களின் அனுபவ பகிா்வு, சந்தை தகவல் உள்ளிட்டவை குறித்து விரிவாக கற்றுத்தரப்படும்.
பயிற்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் பயிற்சி கையேடு, சான்றிதழ் வழங்கப்படும். ஆக. 8-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி நடைபெறும். பயிற்சியில் சேர விரும்புவோா் வேளாண்மை அறிவியல் நிலையத்தை 0431-296285, 81225-86689 என்ற தொலைபேசி எண்களில் ஆக. 7-ஆம் தேதிக்குள் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம்.
மேலும், விவரங்களுக்கு வேளாண் அறிவியல் நிலையம், சிறுகமணி என்ற முகவரியில் நேரிலும் அணுகலாம் என திட்ட ஒருங்கிணைப்பாளா் முரளி அா்த்தநாரி தெரிவித்துள்ளாா்.