TNPSC – Tamil Nadu State Judicial
Service பற்றிய முழு விபரம்
தேர்வு வாரியம்:
தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: Tamil Nadu State
Judicial Service
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
பணியின் பெயர்: நீதிபதி
(Civil Judge)
தேர்வு செய்யப்படும் முறை:
முதல்நிலைத் தேர்வு
முதன்மைத்
தேர்வு
நேர்முகத்
தேர்வு
தகுதி:
For Practising Advocates/Pleaders and Assistant Public Prosecutor
1. மத்திய
சட்டம் அல்லது மாநில
சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட / இணைத்துக்கொள்ளப்பட்ட இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு
பல்கலைக்கழகத்தில் அல்லது
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி
நிறுவனத்தில் சட்ட
துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் தமிழ்நாடு
/ பிற மாநிலங்களில் உள்ள
பார் கவுன்சிலில் பதிவு
செய்திருக்க வேண்டும்.
2. இப்பதவிக்கான காலிப்பணியிட அறிவிப்பின் தேதியன்று ஏதேனும் ஒரு
நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்திருக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வழக்கறிஞராக அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது
குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வழக்கறிஞர் அல்லது உதவி பொது
வழக்கறிஞர் அனுபவத்துடன் உதவி
பொது வழக்கறிஞராக பணிபுரிந்து கொண்டிருக்க வேண்டும்.
புதிய சட்ட பட்டதாரிகள் (Fresh
Law Graduates)
1. மத்திய
சட்டம் அல்லது மாநில
சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட / இணைத்துக்கொள்ளப்பட்ட இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு
பல்கலைக்கழகத்தில் ல்லது
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி
நிறுவனத்தில் சட்டத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. பார்
கவுன்சிலில் பதிவு செய்யும்
தகுதி பெற்றிருக்க வேண்டும்.
3. ஒதுக்கப்பட்ட பிரிவுகளின் கீழ் உள்ள
விண்ணப்பதாரர்கள் 45% மதிப்பெண்களும் மற்றும் திறந்த பிரிவுகளின் கீழ் உள்ள விண்ணப்பதாரர்கள் 50% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
4. இப்பதவிக்கான காலிப்பணியிட அறிவிப்பின் தேதியிலிருந்து மூன்று
வருடங்களுக்கு முன்பாக
சட்டத் துறையில் பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.
வயது: 25 ஆண்டுக்கு மேல்
இருக்க வேண்டும். (குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)
ஊதியளவு: ரூ. 27700 – 770 –
33090 – 920 – 40450 – 1080 – 44770 (மாதம்).