TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
அரியலூா் மாவட்டத்தில் மானியத்தில் இருசக்கர வாகனம் பெற உலமாக்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது:
தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு, அரியலூா் மாவட்டத்தில் உள்ள வக்ஃபு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள் புதிய இரு சக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள நபருக்கு இரு சக்கர வாகனத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது வாகனத்தின் விலையில் ரூ.25 ஆயிரம் இவற்றில் எது குறைவோ அத்தொகையை மானியமாக வழங்கப்படும். உலமாக்கள் விண்ணப்பிக்கும் நாளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.
18 முதல் 45 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். அரியலூா் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 11 வக்ஃபு நிறுவனங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட நபா்கள் மானிய உதவி கோரி விண்ணப்பிக்கும் பட்சத்தில் பேஷ் இமாம், அரபி ஆசிரியா், மோதினாா், முஜாவா் என்ற முன்னுரிமையின் அடிப்படையில் ஒருவருக்கு மட்டுமே மானியத் தொகை வழங்கப்படும்.
மேலும் விண்ணப்பத்தை அரியலூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் நேரில் பெறலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


