கலாமை கொண்டாடுவோம் – இன்று மாலை 6 மணிக்கு
ஆன்லைன் கலந்துரையாடல்
‘இந்து
தமிழ் திசை’, கன்னியாகுமரி ஸ்டெல்லா மேரீஸ் காலேஜ்
ஆஃப் இன்ஜினீயரிங் இணைந்து
நடத்தும் கலாமை கொண்டாடுவோம் எனும்
ஆன்லைன் சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வு இன்று மாலை
6 மணிக்கு நடைபெறுகிறது
கலாமின்
அறிவியல் சிந்தனைகளை இளைய
தலைமுறையினரிடம் கொண்டு
சேர்க்கும் வகையில் ‘இந்து
தமிழ் திசை’ நாளிதழ்
‘கலாமை கொண்டாடுவோம்’ எனும்
நிகழ்வைத் தொடர்ந்துநடத்தி வருகிறது.
அதன்படி, இன்று(ஆக.28)
மாலை 6 மணிக்கு ‘கலாமை
கொண்டாடுவோம்’ எனும்
ஆன்லைன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்துகிறது. இதில், தேசிய
வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி
மன்ற இயக்குநரும், ராணுவ
விஞ்ஞானியும், அறிவியல்
எழுத்தாளருமான டாக்டர்
வி.டில்லிபாபு, ஏவுகணைகள்
ஆராய்ச்சி மற்றும் உருவாக்கத்தில் அப்துல் கலாமுடன் பணியாற்றியவரும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும்
மேம்பாட்டு ஆய்வகத்தின் முன்னாள்
இயக்குநருமான வி.ஜே.சுந்தரம்
ஆகியோர் பங்கேற்று, கலந்துரையாட உள்ளனர்.
இன்றைய
நவீன அறிவியல் தொழில்நுட்பத்தின் சிறப்பான பங்களிப்பு, அப்துல் கலாமோடு இணைந்து
பணியாற்றிய அனுபவம் பற்றி
இந்தக் கலந்துரையாடலில் பகிர்ந்துகொள்கின்றனர்.
பங்கேற்க
விரும்புவர்கள் http://bit.ly/3ye4Yx2 என்றலிங்க்கில் பதிவு செய்யலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


