கல்லுாரி மாணவர்களுக்கு இடையே, ‘மாதிரி நீதிமன்றம்’ போட்டிகள் நடத்தப்படவுள்ளன; இவற்றில் பங்கேற்க விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கோவையில் இயங்கி வரும் சிட்டிசன் வாய்ஸ் கிளப் வெளியிட்டுள்ள அறிக்கை:மூன்று விதமான தலைப்புகளில் இளங்கலை, முதுகலை மாணவர்கள் பங்கேற்கலாம்.
டிஜிட்டல் சகாப்தம் என்ற தலைப்பில், ஆன்லைன் வணிக அபாயங்கள், இணைய தள ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு சிறு நாடகம், திடக்கழிவு மேலாண்மை என்ற தலைப்பில், வீட்டுக் கழிவுகளைக் கையாள்வது குறித்த, ஒரு வீதி நாடகம் உருவாக்க வேண்டும். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்ற தலைப்பிலும், எதிர்காலத் திட்டங்களை விளக்கும் கருத்து வடிவமைப்பைத் தயாரிக்கலாம்.கோவை குமரகுரு கலை அறிவியல் கல்லுாரியில், வரும் 19, 20 ஆகிய இரண்டு நாட்கள் இந்த போட்டிகள், காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கும்.
ஒரு கல்லுாரியிலிருந்து அதிகபட்சமாக ஐந்து அணிகள் இடம் பெறலாம். ஒவ்வொரு அணியிலும் 10 மாணவர்கள் பங்கேற்கலாம்.வரும் 5ம் தேதிக்குள், citizensvoiceclub@gmail.com, info@citizensvoicecoimbatore.org ஆகிய இ-மெயில்களில் விண்ணப்பிக்கலாம்.விபரங்களை, 78670 02534, 96009 04478 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.