HomeExam DetailsBank Exam Detailsஎக்ஸ்போர்ட்-இம்போர்ட் பேங்க் ஆஃப் இந்தியா (EXIM Bank) பற்றிய முழு விபரம்

எக்ஸ்போர்ட்-இம்போர்ட் பேங்க் ஆஃப் இந்தியா (EXIM Bank) பற்றிய முழு விபரம்

Export Import  Bank of India  (EXIM BANK)

எக்ஸ்போர்ட்இம்போர்ட்
பேங்க் ஆஃப் இந்தியா
(EXIM Bank)
பற்றிய முழு விபரம்

தேர்வு வாரியம்:
எக்ஸ்போர்ட்இம்போர்ட் பேங்க்
ஆஃப் இந்தியா (EXIM Bank)

தேர்வின் பெயர்: EXIM Bank

📚 4500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

எக்ஸ்போர்ட்இம்போர்ட் பேங்க்
ஆஃப் இந்தியா (Export-Import Bank of India):

எக்ஸ்போர்ட்இம்போர்ட் பேங்க் ஆஃப்
இந்தியா என்பது சர்வதேச
வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வங்கியாக
திகழ்கிறது. இதன் கிளைகள்
இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் சேர்த்து மொத்தம் 19 கிளைகள்
மட்டுமே இருக்கின்றன.

பணியின் பெயர்:

  • நிர்வாக
    அலுவலர் (Administrative Officers)
  • தகவல்
    தொழிநுட்ப அலுவலர் (IT Officer)
  • சட்ட
    அலுவலர் (Legal Officer)

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்
தேர்வு மற்றும் நேர்காணல்
முடிவுகளை கொண்டு நிரப்பப்படுகின்றன.

நிர்வாக அலுவலர் (Administrative Officers)

தகுதி:

குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும்
ஒரு துறையில் பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.

கணினியில்
பயன்படுத்தப்படும் புதிய
தொழில்நுட்பங்களை பற்றி
பரவலாக தெரிந்திருக்க வேண்டும்.

அனுபவம்: குறைந்தபட்சம் மூன்று
ஆண்டுகள் செயலகங்களில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.
சரளமாக ஆங்கிலம் பேசும்
திறனும் சிறந்த தகவல்
தொடர்பு திறன்களை பெற்றிருக்க வேண்டும். வெளிநாட்டு மொழிகள்
பேசத் தெரிந்தவர்களுக்கும் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு திறன்
கொண்டிருப்பவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது: 40 ஆண்டுக்குள் இருக்க
வேண்டும். (குறிப்பு: விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்.)

ஊதிய அளவு: ரூ.
23700 –
ரூ. 42020 (மாத
ஊதியம்)

தகவல்
தொழிநுட்ப அலுவலர் (IT Officer)

தகுதி:

குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்துகம்ப்யூட்டர் சயின்ஸ்
துறையில் இளங்கலை / முதுகலை
பொறியியல் பட்டம் அல்லது
மாஸ்டர் ஆஃப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் (MCA) பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.

பகுதி
நேரம் வாயிலாக பட்டம்
பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க இயலாது.

அனுபவம்: பட்டம் பெற்ற
துறையில் விண்ணப்பதாரர்கள் 3 வருடம்
அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: பொது
பிரிவினருக்கு 35 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 38 ஆண்டுகளும், எஸ்சி பிரிவினருக்கு 40 ஆண்டுகளும் இருக்க வேண்டும்.

ஊதிய அளவு: ரூ.
14,00,000 (
ஆண்டு ஊதியம்)

சட்ட
அலுவலர் (Legal Officer)

தகுதி: குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் சட்டத் துறையில் பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்: பட்டம் பெற்ற
துறையில் விண்ணப்பதாரர்கள் 3 வருடம்
அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் வங்கி
சட்டம் மற்றும் நடைமுறை,
விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் மற்றும் SARFAESI சட்டம்,
DRT, IBC
மற்றும் மீட்பு நடவடிக்கைகள் பற்றி அறிந்திருக்க வேண்டும்.

வயது: பொது பிரிவினருக்கு 35 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 38 ஆண்டுகளும், எஸ்சி பிரிவினருக்கு 40 ஆண்டுகளும் இருக்க வேண்டும்.

ஊதிய அளவு: ரூ.
14,00,000 (
ஆண்டு ஊதியம்)

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ஒரு நாளுக்கு வெறும் ₹1 மட்டுமே!

📚 TNPSC, TNTET, TRB, SSC, RAILWAY — All Exam PDFs are updated in this group. Join now and achieve success in your career!