ஆடை வடிவமைப்பாளர் பயிற்சி ஆர்வமுள்ள மகளிருக்கு அழைப்பு
தேசிய
நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ், இலவச உதவி
ஆடை வடிவமைப்பாளர் பயிற்சியில் சேர, சென்னையைச் சேர்ந்தோர் நேரடியாக வரலாம் என,
‘ஸ்மார்ட் ஸ்கில்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி‘
நிறுவனம் அறிவித்துள்ளது.
இது
குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட
செய்தி குறிப்பு:தேசிய
நகர்ப்புற வாழ்வாதார திட்டம்,
ஏழை, எளியோர், தொழில்
முனைவோராக மாறி, வறுமையில்
இருந்து வெளியே வர,
திறன் பயிற்சி வாயிலாக
ஊக்கப்படுத்தி வருகிறது.
அதன்படி, அரும்பாக்கம், லோகநாதன்
நகரில் உள்ள, ‘ஸ்மார்ட்
ஸ்கில்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப்
பேஷன் டெக்னாலஜி‘ நிறுவனத்தில் மூன்று மாத பயிற்சி
அளிக்கப்பட உள்ளது. உதவி
ஆடை வடிவமைப்பாளர் பயிற்சிக்கு, பிளஸ் 2 படித்திருக்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும்
பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
ஆதி திராவிடர்களுக்கு 40 சதவீதம்
முன்னுரிமை அளிக்கப்படும்.மூன்று
மாத பயிற்சியில், 18 முதல்
35 வயது வரையிலானோர் பங்கேற்கலாம். இதில், 30 இடங்களுக்கான சேர்க்கை
நடைபெறும். பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு, மத்திய அரசின்
சான்றிதழ் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், ஆதார் அட்டை,
ரேஷன் கார்டு, கல்வி
சான்றிதழ், புகைப்படத்துடன் 30ம்
தேதிக்குள் நேரில் வர
வேண்டும். மேலும் விபரங்களுக்கு 90940 10056, 90940 10057 என்ற எண்களில்
தொடர்பு கொள்ளலாம்.