TNPSC முக்கிய
அறிவிப்பு
சான்றிதழ்
சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வில் பங்கேற்க தவறினால் மறுவாய்ப்பு வழங்கப்படாது என்றும்
TNPSC தெரிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு-4ல்
அடங்கிய பணிகளுக்கான எழுத்துத் தேர்வு
கடந்த 2019ம் ஆண்டு
செப்டம்பர் 1ம் தேதி
நடைபெற்றது.
இந்த தேர்வில் தேர்ச்சி
பெற்றவர்களுக்கான சான்றிதழ்
சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தேதியை TNPSC அறிவித்துள்ளது.
தமிழ்நாடு
அரசுத் துறைகளில் கிராம
நிர்வாக அதிகாரிகள், இளநிலை
உதவியாளா்கள், தட்டச்சா்
உள்ளிட்ட 7 வகையான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான தேர்வை TNPSC கடந்த
2019ம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி நடத்தியது.
இதன் முடிவுகள் அதே
ஆண்டு நவம்பர் 12ம்
தேதி வெளியிடப்பட்டது. பின்னா்
இந்த பணியிடங்களின் எண்ணிக்கை
9,882 ஆக அதிகரிக்கப்பட்டது. தொடா்ந்து
கிராம நிர்வாக அதிகாரி,
இளநிலை உதவியாளா், வரி
வசூலிப்பாளா் உள்ளிட்ட
பணிகளுக்கு கடந்த ஆண்டு
பிப்.19 முதல் மார்ச்
17-ஆம் தேதி வரை
கலந்தாய்வு நடத்தப்பட்டது
அதில்
மொத்தமுள்ள 6,007 பணியிடங்களில் 5,798 இடங்கள்
நிரப்பப்பட்ட நிலையில்,
209 இளநிலை உதவியாளா் பணியிடங்கள் மட்டும் நிரப்பப்படவில்லை. அதேபோல்,
கடந்த நவ.2 முதல்
டிச.9-ஆம் தேதி
வரை நடத்தப்பட்ட தட்டச்சா்
பணிக்கான கலந்தாய்வில் மொத்தம்
221 இடங்கள் நிரப்பப்படவில்லை. இளநிலை
உதவியாளா்கள், தட்டச்சா்கள் என காலியாக உள்ள
430 பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பை தமிழக
அரசு வெளியிட்டுள்ளது. அதில்,
இளநிலை உதவியாளர், நில அளவர்
மற்றும் கிராம நிர்வாக அலுவலர்
பதவிகளுக்கு வரும் அக்டோபர்
11 மற்றும் 12 ஆகிய தேதிகளில்
கலந்தாய்வு நடைபெறும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது
தொடர்பான தற்காலிகப் பட்டியல்
தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும்
கலந்தாய்வில் பங்கேற்க
தவறினால் மறுவாய்ப்பு வழங்கப்படாது என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.