மத்திய அரசு
பணி தேர்வுக்கு பயிற்சி
மத்திய
அரசு பணி தேர்வுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில், இலவசமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது என, வேலை
வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் செய்திக் குறிப்பு:
மத்திய
அரசு பணியாளர் தேர்வாணையத்தால், பல்வேறு துறையில், பல்நோக்கு
பணியாளர், பெண்கள் படை
பயிற்றுனர், மருத்துவ உதவியாளர்,
பொறுப்பாளர் என 3,261 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இப்பணிக்கு, https://ssc.nic.in/ என்ற
தேர்வாணைய இணையதளம் வழியாக
விண்ணப்பிக்க வேண்டும்.
இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க, அக்டோபர், 25ம் தேதி
கடைசி நாள். மத்திய
அரசு பணிகளில், தமிழக
இளைஞர்கள் அதிக அளவில்
நியமனம் பெற ஏதுவாக,
போட்டித் தேர்வுக்கான அனைத்து
பாடக்குறிப்புகளும், அரசு
வேலைவாய்ப்பு மற்றும்
பயிற்சித் துறையின், https://tamilnaducareerservices.tn.gov.in/
என்ற இணையதளத்தில், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
மேலும்,
அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் செயல்படும், தன்னார்வ பயிலும் வட்டங்கள்
வழியாக, பணியாளர் தேர்வாணைய
போட்டி தேர்வுகளுக்கென, கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள், நேரடியாக
அல்லது இணையவழியாக நடத்தப்பட
உள்ளன.எனவே, தேர்வு
எழுதுவோர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு,
பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று
பயன் பெறவும்.