முதுநிலை பொறியியல்
படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம்
நீட்டிப்பு
அண்ணா
பல்கலைக்கழகத்தின்கீழ் 300க்கும்
மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் ME, M.Tech, M.Arch, M.Plan போன்ற முதுநிலை
படிப்புகள் கற்று தரப்படுகின்றன. இந்தப் படிப்புகளுக்கு கல்லூரிகளில் சுமார் 14,000 இடங்கள் வரை
உள்ளன. இதற்கான மாணவா்
சோ்க்கை கலந்தாய்வை அண்ணா
பல்கலைக்கழகம் நடத்திவருகிறது.
அதன்படி
நிகழாண்டுக்கான மாணவா்
சோ்க்கை விண்ணப்பப்பதிவு கடந்த
ஆகஸ்ட் 22ல் தொடங்கி
செப்டம்பா் 22ம் தேதியுடன்
முடிவடைந்தது. தற்போது
பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் காலஅவகாசம் அக்டோபா் 11ம் தேதி
வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து விருப்பமுள்ள பட்டதாரிகள் பல்கலை. இணையதளம் வழியாக
துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், சோ்க்கை நடைமுறைகள், விண்ணப்பக் கட்டணம், சான்றிதழ்கள் உட்பட கூடுதல் விவரங்களை
மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து
கொள்ளலாம்.