விரால் மீன்
வளர்த்து அதன் மூலம்
லாபம் பெற முடியும்
இனங்கள்:
- விரால் மீன்களின்
 தலை பாம்பின் தலையைப்போன்ற தோற்றமுடையது. அவை
 பாம்புத் தலை மீன்
 என அழைக்கப்படுகிறது. இவை
 இந்தியா, பாகிஸ்தான், இலங்கை,
 வங்காளதேசம், நேபாளம், பர்மா,
 தாய்லாந்து, சீனா, வியட்நாம்,
 கம்போடியா போன்ற நாடுகளில்
 பரவி உள்ளன.
- விரால் மீன்
 இனங்களில் நமது நாட்டில்
 மட்டும் உள்ளினங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் வளர்ப்புக்கு இரண்டு
 உள்ளினங்கள் மிகவும் முக்கியமானவை. அவை சன்னா மரூவியஸ்
 (ராட்சத விரால்), சன்னா
 ஸ்ட்ரையேட்டஸ்.
விரால் மீன்
வளர்க்க குட்டை அளவு:
  
    📚 3500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎
  
  
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
- 10 சென்ட் நிலத்தில்
 1.5 மீட்டர் ஆழத்திற்கு குழி
 எடுக்க வேண்டும். அந்த
 குழியில் இருந்து எடுக்கும்
 மண்ணைக் கொண்டே கரை
 அமைத்துக் கொள்ள வேண்டும்.
- மழைக்காலத்தில் மழைநீர்
 இந்த குட்டையில் வந்து
 தேங்கும்படி கால்வாய் அமைத்துக்
 கொள்ள வேண்டும். வீட்டில்
 பயன்படுத்தப்படும் கழிவுநீரும் குட்டைக்கு வந்து சேரும்படி
 அமைத்துக் கொள்ள வேண்டும்.
- மழைக்காலங்களில் குட்டைக்கு நீர் அதிகம் வரும்
 போது எதிர் தண்ணீரில்
 மீன்கள் தப்பி செல்லாமல்
 இருக்க குட்டையை சுற்றி
 வளை அமைக்க வேண்டும்.
- சூட்டையில் எப்போதும்
 4 அடி அளவிற்கு நீர்
 நிரம்பியிருக்கும் வகையில்
 போதிய அளவு தண்ணீர்
 வசதி இருக்க வேண்டும்.
 வாழை போன்ற பொருளாதாரப் பயன்தரும் மரங்களை குளக்கரையின் ஓரங்களில் வளர்ப்பது நல்லது.
சந்தை:
மக்களிடையே விரால்
மீனுக்கு வரவேற்பு அதிகம்.
விரால் மீன்களின் சுவை
தனித்து காணப்படுவதே இதற்கான
காரணம் எனலாம். அதனால்
விரால் மீன்களுக்கு சந்தையில்
நல்ல விலை உள்ளது.
உணவு: 
- குளங்களில் வளர்க்கப்படும் விரால் மீன்களுக்கு என்று
 தனியாக ஊட்டச்சத்து மிகுந்த
 அடர்தீவனம் விற்பனை செய்யப்படுகின்றன. குளத்தின் மேல்
 கூண்டு அமைத்து கோழி,
 முயல், புறா, வான்கோழிகளை வளர்த்தால் அவற்றின் எச்சம்
 இந்த குளத்தில் விழும்.
 அந்த எச்சம் மீன்களுக்கு உணவாகும்.
- அதுமட்டுமன்றி கொசு
 ஒழிப்பு மீன்கள், திலேப்பியாக் குஞ்சுகள், சிறுங்கெண்டைகள், தவனையின்
 தலைப்பிரட்டைகள், மண்புழுக்கள், இரத்தப் புழுக்கள், தேவதை
 இறால்கள், நெத்திலிக் கருவாடு
 துண்டுகளாக வெட்டப்பட்ட கழிவு
 மீன்கள், கோழிக் குடல்கள்
 மற்றும் மாட்டிறைச்சி போன்றவற்றை உணவாக தரலாம்.
- விரால் வளர்ப்பில் உணவும் உணவிடலும் மிக
 மிக முக்கியம். அவற்றின்
 உணவுத் தேவையை தினமும்
 நிறைவு செய்ய வேண்டும்.
 காலை 7 மணி, மாலை
 5 மணி என்ற அளவில்
 உணவிடலாம்.
- மீன் வளர்ப்பின் போது மாதம் ஒரு
 முறை மாதிரி மீன்
 பிடிப்பு நடத்தி மீன்கள்
- பெற்றிருக்கும் சராசரி
 வளர்ச்சியை அறிய வேண்டும்.
 ஒவ்வொரு மாதமும் குனத்தில்
 அதிகரிக்கும் மீன்களின்
 மொத்த எடைக்கு ஏற்ப
 உணவின் அளவை அதிகரித்து கொடுக்க வேண்டும்.
- மாட்டு சாணமும்
 மீன்களுக்கு உணவாக அளிக்கலாம். சரியான பராமரிப்பு இருந்தால்
 குட்டை வளர்ப்பில் விரால்
 மீன்கள் 4 மாதத்தில் 1 கிலோ
 எடை வளரும். இன்றைக்கு
 சந்தையில் 1 கிலோ 400 முதல்
 450 ரூ. வரை விற்கப்படுகிறது. குளத்தில் இடப்படும் மீன்
 குஞ்சிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றாற்போல் வருமானமும் கிடைக்கும்.
சுய தொழில் துவங்க வாழ்த்துக்கள். பதிவை அனைவருக்கும் ஷேர் செய்தால் யாரோ ஒருவருக்கு உதவும் என்பதை நம்புகிறோம்.


 
                                    