இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவர் கல்லூரி மற்றும் யுனானி மருத்துவக் கல்லூரி என தமிழக முழுவதும் 5 அரசு கல்லூரிகளில் உள்ள 330 இளநிலை மருத்துவ இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50% இடங்கள் வழங்கப்படுகின்றன.
மீதமுள்ள இடங்களை மாநில அரசு நிரப்பி வருகிறது. அரசு ஒதுக்கீடு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீடு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தி வருகின்றது.
இந்த நிலையில் சித்தா, ஆயுர்வேதா மற்றும் ஹோமியோபதி உள்ளிட்ட படிப்புகளுக்கான நடப்பு ஆண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு நேற்று தொடங்கிய நிலையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பங்கள் மற்றும் தகவல் தொகுப்பேடு வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் ஆகஸ்ட் 25ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் செயலாளர் தேர்வு குழு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்ககம் , அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம் அருகம்பாக்கம் சென்னை 600106 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


