நெட் தேர்வு
ஒத்திவைப்பு
வரும்
அக்.17 முதல் நடைபெறும்
என அறிவிக்கப்பட்டிருந்த UGC NET தகுதித் தேர்வு தேதி
குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிய
நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி
பெற வேண்டும். தேசிய
தேர்வு முகமை (என்டிஏ)
சார்பில்
ஆண்டுக்கு 2 முறை இத்தேர்வு
நடத்தப்படுகிறது.
இதற்கிடையே நிகழாண்டுக்கான நெட் தேர்வானது அக்டோபர்
17 முதல் 25-ம் தேதி வரை நடத்தப்படும் என்று என்டிஏ அறிவித்தது.
இந்த
நிலையில் நெட் தேர்வு நடத்தப்படும் நாள்களில்
வேறு சில போட்டித்
தேர்வுகளும்
நடைபெறவுள்ளன.
இதனால் தேர்வு
தேதியை மாற்ற மேண்டும்
என
தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர். அதையேற்று நெட் தேர்வை
தேதி
குறிப்பிடாமல் என்டிஏ
தற்போது ஒத்திவைத்துள்ளது.