தமிழக திருக்கோயில்களின் பாதுகாப்புக்கு 10,000 பணியாளா்கள் நியமனம்
தமிழக
திருக்கோயில்களின் பாதுகாப்புக்காக 10,000 பாதுகாப்புப் பணியாளா்கள் நியமனம் செய்யப்படவுள்ளனா். அவா்களுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கப்படும் என இந்து சமய
அறநிலையத்துறை அமைச்சா்
பி.கே.சேகா்
பாபு கூறினார்.
சென்னை
நுங்கம்பாக்கத்தில் உள்ள
இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் அலுவலகத்தில் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் குறித்து காஞ்சிபுரம் மற்றும்
வேலூா் மண்டலத்தில் உள்ள
அனைத்து அலுவலா்களுடன் அமைச்சா்
தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சா் சேகா்பாபு பேசியது:
தமிழக
சட்டப் பேரவையில் இந்து
சமய அறநிலையத்துறையின் சார்பில்
112 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் திருப்பணிகள், திருத்தோ், திருக்குளங்கள், நந்தவனங்கள் திருமண மண்டபங்கள், புதிய
கல்லூரிகள், நலதிட்ட உதவிகள்,
பணியாளா் நியமனம் உட்பட
பல்வேறு பணிகள் அடங்கும்.
இந்த அறிவிப்புகளை ஓராண்டுக்குள் செயல்படுத்துவதில் துறை
அலுவலா்கள் முனைப்புடன் செயலாற்ற
வேண்டும்.
தமிழகத்தில் உள்ள திருக்கோயிலுக்குச் சொந்தமான
நிலங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றும்
பணிகளை திருக்கோயில் பணியாளா்கள் உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
தற்காலிகமாக நியமிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேல் தொடா்ந்து பணியாற்றி
வந்த பணியாளா்களுக்கு முதல்வா்
விரைவில் பணிநியமன ஆணைகளை
வழங்கவுள்ளார். மானிய
கோரிக்கையில் அறிவித்தப்படி தமிழகம் முழுவதும் திருக்கோயில்களின் பாதுகாப்பிற்கென 10,000 பாதுகாப்பு பணியாளா்கள் நியமனம் செய்யப்படுவா். அவா்களுக்குத் தேவையான
பயிற்சிகள் வழங்கப்படும் என்றார்.