TNPSC, SSC போட்டி
தேர்வுகளுக்கு இலவச
பயிற்சி
மத்திய
அரசின் பல்வேறு துறைகளில்
பணியிடங்களை நிரப்புவதற்காக அரசு
பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
வெளியிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் பல்நோக்கு பணியாளர்,
பெண்கள் படை பயிற்றுவிப்பாளர் மற்றும் மருத்துவ
பொறியாளர் ஆகிய பணிகளுக்கு 3261 பணியிடங்களை நிரப்புவதற்காக SSC அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும்
இந்தத் தேர்வுகளுக்கு முதல்வர்
ஸ்டாலின் அறிவித்தபடி பயிற்சி
அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் அதற்கான இணையதளத்தில் பதிவு
செய்ய வேண்டும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத்
தொடர்ந்து திருப்பூர் மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வைத்து வருகின்ற அக்டோபர்
20-ம் தேதி முதல்
SSC தேர்வுக்கான பயிற்சிகள் தொடங்க உள்ளதாக மாவட்ட
ஆட்சியர் ப.காயத்ரி
கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இப்பயிற்சியில் சேர விரும்பும் இளைஞர்கள்
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் சென்று
பார்க்கவும் அல்லது 0436-6224226 என்ற
தொலைபேசி எண்ணில் தொடர்பு
கொள்ளலாம்.
மேலும்
கிராமப்புற மற்றும் நகர்ப்புற
மாணவர்களுக்காக இணையதளம்
உருவாக்கப்பட்டு அதில்
தங்கள் விவரங்களை பதிவு
செய்து அதில் பதிவேற்றம் செய்துள்ள பாட குறிப்புகள் மாதிரி வினாக்கள் மற்றும்
மாதிரி தேர்வுகள் போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.