பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு குறித்து முக்கிய
அறிவிப்பு வெளியீடு
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு புகார்
காரணமாக கடந்த 2017 ம்
ஆண்டு நடந்த ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு கொரோனா
ஊரடங்கு காரணமாக நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் , 4 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 28ம்
தேதி முதல், 31ஆம்
தேதி வரை நான்கு
நாட்கள் நடைபெறுகின்றது 1060 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு நடக்கும்
இந்த தேர்வில், 1.38 லட்சம்
பேர் போட்டியிடுகின்றனர்.
2017ம்
ஆண்டு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடந்தது. தேர்வு
முடிந்த பிறகு விடைத்தாள் திருத்தும் போது நடைபெற்ற
முறைகேட்டின் மூலம்
நூற்றுக்கும் அதிகமானவர்களுக்கு மதிப்பெண்களை அதிகரித்து வழங்கினர். முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தேர்வு
ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து
முறைகேட்டில் ஈடுபட்ட
200க்கும் அதிகமான தேர்வர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தடை
விதித்து ஆசிரியர் தேர்வு
வாரியம் நடவடிக்கை எடுத்தது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இதை
தொடர்ந்து 4 ஆண்டுகளுக்குப் பிறகு
வரும் 28ம் தேதி
முதல், 31ம் தேதி
வரை காலை, மாலை
என இருவேளைகளிலும் போட்டித்
தேர்வு கணினி வழியில்
நடைபெறுகிறது. மாநிலம்
முழுவதும் 129 மையங்களில் நடைபெறும்
இந்த தேர்வில் ஒரு
லட்சத்து 38 ஆயிரம் பேர்
போட்டியிடுகின்றனர். இவர்கள் www.trb.tn.nic.in என்ற
இணையதளத்தில் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதில் தேர்வு எழுத
வேண்டிய மாவட்டம் /
நகரம் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும்.
காலை
தேர்வாக இருந்தால் 7.30 மணிக்கு
உள்ளாகவும், மதியம் தேர்வாக
இருந்தால் 12.30 மணிக்கு உள்ளாகவும் தேர்வு மையத்திற்கு கண்டிப்பாக வர வேண்டும். தாமதமாக
வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு
மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பிக்கும் போது
பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் அசல் பிரதியை தவறாமல்
கொண்டு வர வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


