HomeBlogதேர்வில் தவறாக பதில் அளித்திருந்தால் மாணவருக்கு சரி செய்யும் வாய்ப்பு - CBSE

தேர்வில் தவறாக பதில் அளித்திருந்தால் மாணவருக்கு சரி செய்யும் வாய்ப்பு – CBSE

தேர்வில் தவறாக
பதில் அளித்திருந்தால் மாணவருக்கு சரி செய்யும் வாய்ப்பு
– CBSE

இரு
பருவ பொதுத் தேர்வு
முறையை CBSE
அறிவித்துள்ளது.

முதல்
பருவ தேர்வு வரும்
நவம்பர் 16ம் தேதி
துவங்குகிறது. பத்தாம்
வகுப்பு, +2 சேர்த்து
36
லட்சம் மாணவர் தேர்வு
எழுத உள்ளனர். இந்த
முறை தேர்வில் சில
புதுமைகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்வு நேரம்
90
நிமிடம். Multiple Choice முறையில்
60
கேள்விகள் கேட்கப்படும்.

OMR Sheet.ல்
விடையளிக்க வேண்டும். A, B, C, D என நான்கு ஓவல்
வடிவ வட்டங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். சரியான விடைக்கான
ஓவல் வடிவத்தை பால்பாயிண்ட் பேனா மூலம் நிரப்ப
வேண்டும்.

A,
B, C, D

அருகே ஐந்தாவதாக சதுர
வடிவ கட்டம் ஒன்று
கொடுக்கப்பட்டிருக்கும். ஒருவேளை
தவறாக பதில் அளித்ததாக
மாணவர் உணர்ந்தால், சரியான
விடையை சதுர கட்டத்தில் எழுதலாம். உதாரணமாக, ‘Aக்கு
பதில்Bதான்
சரி என நினைத்தால்Bஎன சதுர
கட்டத்தில் எழுதினால் போதும்;
மதிப்பீடு செய்யும்போது இதை
மட்டுமே கணக்கில் எடுத்துக்
கொள்வர்.

விடை அளிக்க
தவறும் பட்சத்தில், அதனை
சம்பந்தப்பட்ட கேள்விக்கு நேரே உள்ள வரிசையில்
குறிப்பிட வேண்டும்.

தேர்வு முடிந்ததும் அன்றைய தினமே தேர்வு
மையத்தில் OMR Sheet
திருத்தப்பட உள்ளது. மதிப்பெண்
விவரம் Upload செய்யப்படும். பின்னர்,
அந்தந்த மண்டல அலுவலங்களுக்கு OMR Sheet அனுப்பி
வைக்கப்படும்.

விடைத்தாள் திருத்தும் முறை பற்றிய வீடியோ,
OMR Sheet மாதிரியை
ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு CBSE நிர்வாகம் விரைவில்
பகிர்ந்துகொள்ள உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular