ஓய்வூதியதாரா்கள் இணைய
தளம் மூலம் ஆயுள்
சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டும்
ஓய்வூதியதாரா்கள் மற்றும் குடும்ப
ஓய்வூதியதாரா்கள் தங்களது
ஆயுள் சான்றிதழை நவ.1-ம்
தேதி முதல் இணைய
தளம் மூலம் சமா்ப்பிக்கும்படி சென்னைத் துறைமுக
நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னைத் துறைமுகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாட்டின்
12 பெருந்துறைமுகங்களில் ஒன்றான
சென்னைத் துறைமுகத்தில் சுமார்
15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட
ஓய்வூதியதாரா்கள் உள்ளனா்.
இவா்களுக்கு ஓய்வூதியமாக மட்டும்
ஆண்டுக்கு சுமார் ரூ.
300 கோடிக்கும் மேல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஓய்வூதியதாரா்கள் மற்றும் குடும்ப
ஓய்வூதியதாரா்கள் ஆண்டுதோறும் சமா்ப்பிக்க வேண்டிய ஆயுள்
சான்றிதழை வரும் நவ.1
முதல் சமா்ப்பிக்க வேண்டும்
என சென்னைத் துறைமுகம்
அறிவித்துள்ளது.
ஆயுள்
சான்றிதழை https://www.jeevanpramaan.gov.in/ என்ற
இணைய தளத்திற்குச் சென்று
கா்ஸ்ரீஹற்ங் இங்ய்ற்ழ்ங் என்ற இடத்தில் தங்களது
அஞ்சல் குறியீட்டு எண்ணை
பதிவு செய்தால் தங்களது
இருப்பிடங்களுக்கு அருகில்
அமைந்துள்ள
கணினி
சேவை மையத்தின் விவரம்
தெரிவிக்கப்படும். அங்கு
சென்று தங்களது ஆயுள்
சான்றிதழை சமா்ப்பிக்கலாம். இது
குறித்து மேலும் விவரங்கள்
தேவையெனில் சென்னைத் துறைமுகத்தின் இணையதளத்தையும் அணுகலாம்.
இதுதவிர ஒடக என
தட்டச்சு செய்து தங்களது
இருப்பிடம் அமைந்துள்ள அஞ்சல்
குறியீட்டு எண்ணைக் குறிப்பிட்டு 7738299899 என்ற அலைபேசி
எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பினாலும் இதேபோல் கணினி சேவை
மையம் குறித்து தகவல்
அனுப்பி வைக்கப்படும். இது
தவிர ஆயுள்சான்றிதழை தூதஞ்சல்
(கூரியா்) அல்லது பதிவு
தபால் மூலம் துறைமுக
முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு துறைமுகத்தில் உள்ள ஓய்வூதியப் பிரிவு
அலுவலகத்தை அணுகலாம்.