HomeBlogவிவசாயிகளுக்கு தங்கள் பயிர்களை காப்பீடு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது

விவசாயிகளுக்கு தங்கள் பயிர்களை காப்பீடு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது

விவசாயிகளுக்கு தங்கள்
பயிர்களை காப்பீடு செய்து
கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து
கனமழை பெய்து வருகிறது.
இந்த மழை மேலும்
தீவிரமடையக் கூடும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான விவசாய நிலங்களில் பயிர்கள்
வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அதற்கு
மேலும் தொடர்ந்து மழை
பெய்தால் பயிர்கள் அழுகும்
அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு வேளாண் மற்றும்
உழவர் நலத்துறை முக்கிய
அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி விவசாயிகள் தங்கள் பயிர்களை காப்பீடு
செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை,
புதுக்கோட்டை, கரூர்,
சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி,
ராமநாதபுரம், திருச்சி, வேலூர்,
ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி,
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர், ஈரோடு மாவட்டங்களில் நவம்பர்
15-
ம் தேதிக்குள் காப்பீடு
செய்யப்பட வேண்டும்.

கன்னியாகுமரி, அரியலூர், திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், நெல்லை, தென்காசி
மாவட்டங்களில் டிசம்பர்
15-
ம் தேதிக்குள் காப்பீடு
செய்து கொள்ள அவகாசம்
வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து
அடுத்தடுத்து மழை
பெய்து வருவதால் உடனே
பயிர்க்காப்பீடு செய்தும்
கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளே கடைசி தேதி வரை
காத்திருக்க வேண்டாம், கால
அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular