கிழிந்த ரூபாய்
நோட்டுகள் இருந்தால் எங்கு எப்படி மாற்ற
வேண்டும்?
கடைகளில்,
பேருந்துகளில் கிழிந்த
ரூபாய் நோட்டுகள் தரப்பட்டால் அதை பெரும்பாலான மக்கள்
வாங்க மாட்டார்கள். விடாமல்
பேசி அதை நோட்டை
அவர்களிடமே தள்ளிவிட்டு வேறு
கிழியாத நோட்டை வாங்கி
விடுவார்கள்.
அதற்கு
மிக முக்கிய காரணம்
கிழிந்த நோட்டை மாற்றுவது
ரொம்ப கஷ்டம், அதுமட்டுமில்லை அவசரத்திற்கு வேறு
எங்கு கொடுத்தாலும் அதை
வாங்க மாட்டார்கள் என்பது
தான். அப்படியே தவறுதலாக
கிழிந்த நோட்டு நம்மிடம்
வந்துவிட்டால் நம்
வீடுகளில் அந்த நோட்டை
பெட்ரோல் பங்குகளில் கொடுத்து
மாற்றுவார்கள் இல்லையென்றால் ரேஷன் கடை.
ஆனால்
கிழிந்த ரூபாய் நோட்டுகளை
வங்கிகளில் எளிதாக மாற்றிக்
கொள்ளலாம். அதற்கு நீங்கள்
எந்தவித படிவத்தையும் நிரப்ப
வேண்டிய அவசியம் கூட
இல்லை. இதுப்பற்றி பலருக்கும் தெரிவதில்லை. இதனால் தான்
அதிகப்படியான மக்கள்
கிழிந்த நோட்டுகளை வாங்க
அச்சப்படுகின்றன.
இதே
சமயத்தில் நீங்கள் மற்றொரு
முக்கியமான தகவலையும் தெரிந்து
கொள்ள வேண்டும். கிழிந்த
ரூபாய் நோட்டுக்களை மாற்றும்
போது அதற்கு எவ்வளவு
மதிப்பு கிடைக்கும் என்ற
விவரங்களை அண்மையில் ரிசர்வ்
பேங்க் ஆஃப் இந்தியா
அறிவித்திருந்தது.
அந்த
விவரங்களை இந்த https://www.rbi.org.in பக்கத்தில் பார்க்கலாம். இந்த விவரங்களை
நீங்கள் தெரிந்து வைத்துக்
கொள்வது கிழிந்த ரூபாய்
நோட்டுக்களை மாற்றும் போது
மிகவும் பயன்படும்.
கிழிந்த
ரூபாய் தாளில் 50%க்கும்
மேற்பட்ட பகுதி கிழியாமல்
இருந்தால் முழுமையான ரூபாய்
மதிப்பு கிடைக்கும். அதுவே
50%க்கும் மேல் சேதம்
அடைந்திருந்தால் நிகரான
மதிப்பு கிடைக்காது.ஆனால்
இது ரூ. 20 வரையிலான
ரூபாய்களுக்கு மட்டுமே
பொருந்தும்.
40%க்கும்
குறைவாகவே சேதமற்ற பகுதி
இருந்தால் அந்த ரூபாய்
நோட்டு நிராகரிக்கப்படும். 40%க்கும்
மேல் 80%க்குள் சேதமற்ற
பகுதி இருந்தால் பாதி
மதிப்பு மட்டுமே கிடைக்கும்.
சரியான
மதிப்பு கிடைக்காத கிழிந்த
ரூபாய் நோட்டுக்கள் வங்கிகளிடம் இருந்து பெறப்பட்டு ரிசர்வ்
பேங்கில் அழிக்கப்படுகின்றன. கண்டிப்பாக இதுப்போன்ற தகவல்களை தெரிந்து
கொள்வது கட்டாயம் கைக்கொடுக்கும்.