நீங்கள் செல்லும்
இடம் கூட்டமாக உள்ளதா என முன்கூட்டியே அறிய
புதிய வசதி அறிமுகம்
கூகுள்
மேப்ஸை பயன்படுத்தும் பயனாளர்கள் இனிமேல் கூட்டம் நிறைந்த
இடங்களை அறிந்து கொள்ளலாம்
என்ற வகையில் தான்
அந்த அப்டேட்டை கூகுள்
நிறுவனம் கொடுத்தள்ளது. இதன்மூலம்
கூட்டம் நிறைந்த இடங்கள்
குறித்த எச்சரிக்கையும் தெரிவிக்கப்படும்.
நாம்
செல்ல இருக்கும் பகுதி,
கூட்டத்தால் நிரம்பி உள்ளதா
இல்லையா என்பதை தெரிந்து
கொள்ளலாம். இதற்காக ஏரியா
பிஸி எனும் வசதி
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்
டைரக்டரிஸ் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒரு
குறிப்பிட்ட ஷாப்பிங் மாலில்
என்னென்ன கடைகள் மற்றும்
இடங்கள் உள்ளன போன்ற
விஷயங்களை தெரிந்து கொள்ள
முடியும்.
இது பல்வேறு
தரப்பினருக்கும் பயனுள்ளதாக அமையும் என கருதப்படுகிறது. இதுகுறித்த கூகுள் லிங்க்
கீழே கொடுக்கப்பட்டுள்ளது,
https://blog.google/products/maps/keep-it-chill-holiday-new-tools-google-maps/