சிறப்பு கல்விக்கடன் வழங்கும் முகாம்
மாவட்ட
அளவில் கல்விக்கடன் பெறுவதற்காக சிவகங்கை, காரைக்குடியில் நவ.,27
அன்று சிறப்பு கல்விக்கடன் வழங்கும் முகாம் நடத்தப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
அவர்
கூறியதாவது, மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற
இணைதளத்தில் விண்ணப்பிக்கவும். வங்கி
நடைமுறைகளுக்கு உட்பட்டு
கல்விக்கடன் வழங்கப்படும். அன்று
காலை 10 முதல் மாலை
5 மணி வரை முகாம்
நடக்கும்.
சிங்கம்புணரி, எஸ்.புதுார், கண்ணங்குடி, தேவகோட்டை, கல்லல், சாக்கோட்டை ஒன்றிய பகுதிக்கு காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபம்,
சிவகங்கை, காளையார்கோவில், மானாமதுரை,
இளையான்குடி, திருப்புவனம், திருப்புத்துார் ஒன்றிய பகுதிக்கு சிவகங்கை
கலெக்டர் அலுவலகத்தில் முகாம்
நடக்கும்.
முகாமிற்கு விண்ணப்பத்துடன், பெற்றோரின் இரு பாஸ்போர்ட் சைஸ்
போட்டோ, வங்கி கணக்கு
புத்தகம், இருப்பிடம், வருவாய்,
ஜாதி, கல்வி சான்குள்,
பான், ஆதார்கார்டுகளுடன் வரவும்.