SBI Customer Care நம்பரை
கூகுளில் தேட வேண்டாம்
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான
SBI, நாடு முழுவதும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.
சைபர்
குற்றங்கள் அதிகரித்து வரும்
இந்த காலக்கட்டத்தில், தனது
வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு
எச்சரிக்கைகளையும் அந்த
வங்கி வழங்குகிறது. அந்த
வகையில் சமீபத்தில் SBI வங்கியின்
பெயரை பயன்படுத்தி நிதி
மோசடிகளை நடத்தும் போலி
கஸ்டமர் கேர் எண்கள்
குறித்து எஸ்பிஐ தனது
வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
அதன்படி,
ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் கூகுளில் கஸ்டமர் கேர்
எண்களை தேடுவது வாடிக்கையாளர்களுக்கு ஆபத்தானது என்று
எஸ்பியை கூறியுள்ளது. அப்படி
கூகுளில் தேடும் நபர்களை
குறி வைத்து சைபர்
குற்றவாளிகள் மோசடியில்
ஈடுபடுகின்றனர்.. எனவே
கஸ்டமர் கேர் எண்களுக்கு, வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்க வேண்டும் என்றும்
அந்த வங்கி அறிவுறுத்தியுள்ளது.
தனது
அதிகாரப்பூர்வ ட்விட்டர்
கணக்கில் பதிவிட்டுள்ள அந்த
வங்கி போலி போலி
கஸ்டமர் கேர் எண்கள்
குறித்து ஜாக்கிரதையாக இருங்கள்.
சரியான வாடிக்கையாளர் சேவை
எண்களுக்கு SBI.ன் இணையதளத்தை பார்க்கவும். ரகசிய வங்கித்
தகவல்களை பகிர்ந்து கொள்வதை
தவிர்க்கவும். என்று
குறிப்பிட்டுள்ளது.. மேலும்
தனது வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ்
அல்லது மின்னஞ்சல்கள் மூலம்
பல நினைவூட்டல்களை எஸ்பிஐ
வங்கி அனுப்பி உள்ளது.
SBI ஊழியர்கள் கணக்கு எண்கள்,
டெபிட் கார்டு விவரங்கள்,
இணைய வங்கிச் சான்றுகள்
அல்லது OTP போன்ற முக்கியமான தகவல்களை ஒருபோதும் கேட்க
மாட்டார்கள். எனவே யாரிடமும்
வங்கி தொடர்பான தகவல்களை
பகிர வேண்டாம்.. மூன்றாம்
தரப்பு இணையதளங்களில் உள்ள
எந்த இணைப்புகளையும் கிளிக்
செய்ய வேண்டாம். ஏனெனில்
உங்கள் வங்கிக் கணக்கு
அல்லது பிற தனிப்பட்ட
தகவல்கள் கசிவதற்கு வழிவகுக்கும். என்றும் எஸ்பிஐ வங்கி
எச்சரித்துள்ளது..
கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் :
- தெரியாத இணையதளங்களில் இருந்து SMS/ மின்னஞ்சல்களில் பெறப்பட்ட
இணைப்புகளை கிளிக் செய்ய
வேண்டாம் - தெரியாத எண்களில்
இருந்து வரும் தொலைபேசி
அழைப்புகள்/மின்னஞ்சல்களின் அடிப்படையில் எந்த மொபைல் செயலியையும் பதிவிறக்க வேண்டாம். - ஆதார் எண்,
பிறந்த தேதி, மொபைல்
எண், டெபிட் கார்டு
எண், பின், CVV, இணைய
வங்கி பயனர் ஐடி/கடவுச்சொல், OTP போன்ற முக்கியமான விவரங்களை யாருடனும் பகிர
வேண்டாம். - KYCஐ புதுப்பிக்க வங்கி ஒருபோதும் இணைப்புகளை அனுப்புவதில்லை.
- வாடிக்கையாளர்கள் தங்கள்
வங்கிக் கணக்குகளில் ஏதேனும்
தனிப்பட்ட தகவல்களை புதுப்பிக்கவோ அல்லது மாற்றவோ விரும்பினால், வங்கியின் இணையதளத்தை எப்போதும்
பார்வையிட வேண்டும். மூன்றாம்
தரப்பு வலைத்தளங்களைப் பயன்படுத்துவது பெரும்பாலும் மோசடி
மற்றும் மோசடிகளுக்கு வழிவகுக்கும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

