முதியோர் ஓய்வூதியம் – இனி
ஆதார் கட்டாயம்
முதியோர்
ஓய்வூதியம் உள்ளிட்ட 8 பென்சன்
திட்டங்களில் தொடர்ந்து
பயன்பெற இனி ஆதார்
கட்டாயம் என்று தமிழக
அரசு தெரிவித்துள்ளது.
இந்திரா
காந்தி தேசிய முதியோர்
ஓய்வூதியத் திட்டம் (Indira Gandhi
National Old Age Pension Scheme), இந்திரா காந்தி
தேசிய மாற்றுத்திறனாளி ஓய்வூதியத் திட்டம் (Indira Gandhi National Disability
Pension Scheme) , இந்திரா காந்தி தேசிய
விதவை பென்சன் திட்டம்
(Indira Gandhi National Widow Pension Scheme) , மாற்றுத்திறனாளி ஓய்வூதியத் திட்டம் (Differently Abled Pension Scheme) ஆகியவற்றுக்கு இனி ஆதார் கட்டாயம்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
அதே
போல் ஆதரவற்ற விதவை
ஓய்வூதியத் திட்டம் (Destitute Widow
Pension Scheme), ஆதரவற்ற / கைவிடப்பட்ட மனைவிகள்
ஓய்வூதியத் திட்டம்
(Destitute/Deserted Wives Pension Scheme) , முதல்வர் உழவுப்
பாதுகாப்புத் திட்டம்,
50 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றுக்கும் ஆதார்
கட்டாயம் என தமிழக
அரசு கூறியுள்ளது .மேற்கூறிய
எட்டு பென்சன் திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு மாதம்
1000 ரூபாய் பென்சன் தொகை
வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இத்திட்டங்களின் கீழ்
தொடர்ந்து பயன்பெறுவதற்கு ஆதார்
கார்டு கட்டாயம் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார்
கார்டு இல்லாதவர்கள் உடனடியாக
விண்ணப்பிக்கும்படி அரசு
அறிவுறுத்தியுள்ளது. ஆதார்
கார்டு பெறும் வரை
பென்சன் பெறுவதற்கு ஆதார்
கார்டு விண்ணப்பித்ததற்கான கோரிக்கை
ஆவணம் காட்ட வேண்டும்.
அத்துடன்
வங்கி பாஸ்புக், வாக்காளர்
அட்டை, ரேஷன் கார்டு,
பான் கார்டு, ஓட்டுநர்
உரிமம், பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை காட்ட
வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

