Ph.D படிக்கும் மாணவ
மாணவியருக்கு ரூ.1
லட்சம் கல்வி ஊக்கத்தொகை
தமிழகத்தில் முனைவர் பட்டப்படிப்பு(PhD) படிக்கும்
ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியின மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்டு வரும்
கல்வி உதவித் தொகை
ஒரு லட்சம் ரூபாயாக
உயர்த்தப்பட்டுள்ளது.
2013-2014ஆம்
கல்வியாண்டு முதல், முழுநேர
முனைவர் பட்டப்படிப்பு படிக்கும்
ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியின மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகையாக
தலா 50 ஆயிரம் ரூபாய்
வழங்கப்பட்டது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
அடுத்து
2017-2018 ஆம் கல்வி ஆண்டில்
மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்தது.
நடப்பு கல்வியாண்டு, கல்வி
உதவித்தொகை வழங்க 6 கோடி
ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் திமுக அரசு தாக்கல்
செய்த திருத்திய பட்ஜெட்டில், முனைவர் பட்டப் படிப்புகளுக்கான கல்வி உதவித் தொகை
திட்டம், அதிகமானவர்கள் தரக்கூடிய
வகையில் மறு சீரமைக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் கல்வி
உதவித் தொகைக்கு ஒரு
லட்சம் ரூபாய் என்ற
அளவில் உயர்த்தப்படும். இந்தத்
திட்டத்திற்கான நிதி
ஒதுக்கீடு 16 கோடி ரூபாயாக
உயர்த்தப்படும் என்று
அறிவிக்கப்பட்டது. இதனைத்
தொடர்ந்து நிதி ஒதுக்கீட்டை 16 கோடி ரூபாயாகவும், மாணவர்களுக்கான உதவித் தொகை 50 ஆயிரம்
ரூபாயிலிருந்து 1 லட்சம்
ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி
ஒவ்வொரு வருடமும் 1600 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவும், தகவல்
பெறும் மாணவர்களின் குடும்ப
வருமானத்தை 8 லட்சம் ரூபாயாக
உயர்த்தியும் அரசாணை
வெளியிடப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

