கடவுச்சீட்டு பெறுவதற்கு DIGILOCKER மூலம் ஆவணம்,
சான்றிதழ் சமர்ப்பிக்கும் வசதி
ஒன்றிய
அரசின் மின்னணு, தகவல்
தொழில்நுட்ப அமைச்சகம், DIGILOCKER என்ற
மின்னணு பாதுகாப்பு பெட்டக
வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதில்,
பொதுமக்கள் தங்களது கல்வி,
ஜாதி, இருப்பிட, வருமான
சான்றிதழ்கள், ஓட்டுநர்
உரிமம், வீட்டுப் பத்திரங்கள், காப்பீட்டு ஆவணங் கள்
உள்ளிட்ட அனைத்து முக்கிய
ஆவணங்களையும் மின்னணு
முறையில் சேகரித்து வைக்க
முடியும்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
ஒன்றிய
அரசின் டிஜிட்டல் இந்தியா
திட்டத்தின் கீழ், நாட்டு
மக்கள் அனைவருக்கும் மின்னணு
முறையில் சேவை மற்றும்
அறிவு சார்ந்த பொருளாதாரத்தை உரு வாக்குவது இதன்
முக்கிய நோக்கமாகும்.
பொதுவாக,
கடவுச்சீட்டு கேட்டு
விண்ணப்பிப்பவர்கள் நேர்காணலுக்கு செல்லும்போது தங்களது
அசல் சான்றிதழ்களை கொண்டு
செல்ல வேண்டும்.
அவர்கள்,
டிஜிலாக்கர் செயலியில் தங்கள்
ஆவணங்களை சேமித்து வைத்திருந்தால், நேர்காணலுக்கு அசல்
சான்றிதழ்களை கையில்
எடுத்துச் செல்ல அவசியம்
இல்லை. டிஜிலாக்கரில் இருந்தே
ஆவணங் கள் நேரடியாக
சரிபார்க்கப்படும் .
இதனால்,
ஆவணங்கள் தொலைந்து போகுமோ
, சேதம் அடையுமோ என
அச்சப்பட தேவையில்லை.
தவிர,
நேர்காணலின்போது அசல்
ஆவணங்களை சரிபார்க்க சராசரியாக
ஒரு நபருக்கு அரை
மணி ஆகும் என்றால்,
டிஜிலாக்கர் மூலம் 15 நிமிடத்தில் சரிபார்த்து விடலாம் . இதனால்,
நேரமும் மிச்ச மாகும்.
தற்போது
நேர்காணலுக்கு தினமும்
சராசரியாக 2,100 பேர் வரை
அழைக்கப்படுகின்றனர். ஆவணங்கள்
சரிபார்த்தல் விரை
வாக நடப்பதால் , இன்னும்
கூடுதல் பேரை நேர்காணலுக்கு அழைக்க முடியும்.
டிஜிலாக்கரில் போலி ஆவணங் களை
பதிவேற்றம் செய்ய முடியாது.
இதனால், மோசடிகள் தடுக்
கப்படும் . அதையும் மீறி
, போலி ஆவணங்களை பதிவேற்றம் செய்து அதன்மூலம் கடவுச்சீட்டு பெற்றது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

