Wednesday, August 13, 2025
HomeBlogTNPSC குரூப் 1 தேர்வின் புதிய முடிவுகள் விரைவில் வெளியாக வாய்ப்பு

TNPSC குரூப் 1 தேர்வின் புதிய முடிவுகள் விரைவில் வெளியாக வாய்ப்பு

TNPSC குரூப் 1 தேர்வின்
புதிய முடிவுகள் விரைவில்
வெளியாக வாய்ப்பு

குரூப்
1
முதல்நிலை தேர்வு முடிவுகள்
வெளியாகும் தேதி மற்றும்
மற்ற அரசு தேர்வுகள்
அறிவிக்கப்படும் நாள்
குறித்த புதிய தகவல்கள்
வெளிவந்துள்ளன. துணை
ஆட்சியர் (ஆர்டிஓ), டிஎஸ்பி,
ஊரக வளர்ச்சி உதவி
இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், வணிக
வரி உதவி ஆணையர்,
மாவட்டத் தீயணைப்பு அலுவலர்
ஆகிய அரசுப் பதவிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணிகள்
தேர்வாணையம் TNPSC நடத்திய குரூப்-1
தேர்வு, கடந்த ஆண்டு
ஜனவரி 3-ம் தேதி
நடைபெற்றது. இந்த முதல்
நிலை தேர்வின் முடிவுகள்
அடுத்த மாதமே வெளியிடப்பட்டது.

இதற்கிடையே, உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், தமிழ்
வழியில் பயின்றவர்களுக்கான அரசாணையில் சில திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதன் அடிப்படையில் முதல்நிலை தேர்வின் புதிய
முடிவுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இவை இன்னும்
2
வாரங்களில் வெளியாகும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.

குரூப்
1
முதல் நிலை தேர்வுக்கான புதிய முடிவுகள் வெளியாகும் அதே நாளில், பிரதான
தேர்வு குறித்த அறிவிக்கை
வெளியிடப்படும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.

குரூப்
4
பணிகளுக்கு நேர்முகத் தேர்வு
கிடையாது. ஆனால் குரூப்
1,
குரூப் 2 நிலையிலான பணிகளுக்கு எழுத்துத் தேர்வுடன், நேர்முகத்
தேர்வும் நடத்தப்படுகிறது இந்நிலையில், தமிழ்நாடு அரசும் குரூப்
2
பணிகளுக்கு நேர்முகத் தேர்வை
நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வருவாய்
உதவியாளர், பேரூராட்சி செயல்
அலுவலர், நகராட்சி ஆணையர்,
துணை வணிகவரி அதிகாரி,
சார் பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி
தொழிலாளர் அலுவலர், இளநிலை
வேலைவாய்ப்பு அலுவலர்,
தலைமைச் செயலக உதவி
பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ),
உள்ளாட்சி தணிக்கை உதவி
ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி
ஆய்வாளர் உள்ளிட்ட காலிப்
பணிகள் குரூப் 2 தேர்வு
மூலமாக நிரப்பப்படுகின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular