HomeBlogசின்ன வெங்காயம் பயிர் காப்பீடு - விவசாயிகளுக்கு அழைப்பு

சின்ன வெங்காயம் பயிர் காப்பீடு – விவசாயிகளுக்கு அழைப்பு

சின்ன வெங்காயம்
பயிர் காப்பீடுவிவசாயிகளுக்கு அழைப்பு

புதுச்சத்திரம் வட்டாரத்தில், பிரதம
மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம், 2021-2022ல்
வெங்காயம் பயிர் காப்பீடு
செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடன் பெறும்
விவசாயிகள், சம்பந்தப்பட்ட வங்கிகளில், தங்களின் சுய விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து
கொள்ளலாம்.

கடன்
பெறாத விவசாயிகள், பொது
சேவை மையங்கள், தேசிய
மயமாக்கப்பட்ட வங்கிகள்
மற்றும் தொடக்க வேளாண்
கூட்டுறவு சங்கங்களில் விருப்பத்தின் பேரில் பதிவு செய்து
கொள்ளலாம். இத்திட்டத்தில் ஏக்கருக்கு, 1,920 ரூபாயை வரும்,
30
க்குள் செலுத்தி காப்பீடு
செய்து கொள்ளலாம். பயிர்
காப்பீடு செய்யும் முன்
முன்மொழிவு விண்ணப்பத்துடன், கிராம
நிர்வாக அலுவலரின் அடங்கல்,
விதைப்பு சான்று.

செயல்பாட்டில் உள்ள வங்கி கணக்கு
புத்தகத்தின் முதல்
பக்க நகல், ஆதார்
அட்டை நகல் ஆகியவற்றுடன் இணைத்து, கட்டணத்தை பொதுச்சேவை மையங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்
கூட்டுறவு சங்கங்களில் செலுத்தலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular