10,583 பேருக்கு இருசக்கர
வாகன மானியம் – தமிழக
அரசு நிதி ஒதுக்கீடு
தமிழ்நாடு
வக்பு வாரியத்தில் பதிவு
செய்யப்பட்டு, வக்பு
நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு பயன்படும்
வகையில், புதிய இருசக்கர
வாகனங்கள் வாங்க மானியம்
வழங்கும் திட்டத்தை அரசு
செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள 10,583 நபர்களுக்கு மிதிவண்டிகள் வழங்குவதற்கு அனுமதி
அளித்து தமிழக அரசு
அரசாணை வெளியிட்டுள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 2021 – 2022 ஆம்
ஆண்டுக்கான மானிய கோரிக்கையின் போது சிறுபான்மையினர் நலன்
மற்றும் வெளிநாடு வாழ்
தமிழர் நலத்துறை அமைச்சர்,
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள 10, 583 பேருக்கு,
4 கோடியே 76 லட்சத்து 73 ஆயிரத்து
ரூபாய் செலவில் மிதிவண்டிகள் வழங்கப்படும் என
தெரிவித்தார்.
இதனையடுத்து, உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள 10,583 நபர்களுக்கு இருசக்கர
வாகன மானியம் வழங்க
நிதி ஒதுக்கீடு செய்து
தமிழக அரசு அரசாணை
வெளியிட்டுள்ளது.
இந்த
திட்டத்தின் கீழ், பணியாளர்கள் வாங்கும் இருசக்கர வாகனங்கள்
125சிசி மிகாமலும், வாகன
விதிமுறை சட்டம் 1998 பதிவு
செய்திருக்க வேண்டும். இந்தத்
திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் நபருக்கு இருசக்கர வாகனத்தின் மொத்த விலையில் 50% அல்லது
வாகனத்தின் விலையில் 25 ஆயிரம்
ரூபாய் என எது
குறைவோ அந்த தொகையை
மானியமாக வழங்கப்படும்.