தங்க நகைக்கடன் வாங்குவதற்கு புகழ்பெற்ற நிறுவனம் மற்றும் சிறந்த வங்கிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். அடகு வைக்கப்பட்ட தங்கத்தின் சந்தை மதிப்பில் 75% வார தங்க நகைக்கடனை பெற முடியும். தங்க நகைகளை அடகு வைக்கும் முன் தங்கத்தின் அன்றைய விலையை சரிபார்த்து விட்டு செல்ல வேண்டும். ஏனெனில் தங்கத்தின் விலை குறைந்தால் கடன் தொகையின் அளவும் குறையும்.
இதனால் அதிக தங்க நகைகளை அடமானம் வைக்க வேண்டிய அவசியம் வரும். ஆதலால் தங்கத்தின் விலை குறைவாக இருக்கும் தங்க நகைகளை அடமானம் வைப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தங்க நகைக்கடனை பெறும் போது வட்டி விகிதங்கள், செயலாக்க கட்டணம், முன்கூட்டியே செலுத்தும் கட்டணங்கள் மற்றும் திருப்பிச் செலுத்தும் முறை ஆகியவற்றை ஒப்பீட்டு பார்க்க வேண்டும். அதன் பின் எந்த வங்கிகளில் அதிக கடன் சலுகைகளை பெற முடியும் என்று தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதன்படி 2 வருட காலத்திற்கு ரூ.5 லட்சம் தங்க நகைக்கடன்களுக்கான வட்டி விகிதங்கள் மற்றும் EMIகள் கீழ் உள்ள அட்டவணையில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் சில முன்னணி வங்கிகளின் தற்போதைய வட்டி விகித சலுகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி அதிக கடன் தொகை வழங்கும் வங்கிகளை தேர்ந்தெடுக்கலாம்.