HomeBlogகஞ்சா, லாட்டரி விற்பனை பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.10,000 பரசுத்தொகை

கஞ்சா, லாட்டரி விற்பனை பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.10,000 பரசுத்தொகை

கஞ்சா, லாட்டரி
விற்பனை பற்றி தகவல்
தெரிவித்தால் ரூ.10,000
பரசுத்தொகை

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா
போன்ற போதை பொருட்கள் மற்றும் லாட்டரி
விற்பனையை ஒழிக்க உடனடி
நடவடிக்கை எடுக்க, வருகின்ற
06.01.2022
வரை கஞ்சா மற்றும் லாட்டரி
ஒழிப்பு வேட்டை நடத்த
வேண்டும்.

கஞ்சா,
லாட்டரி விற்பனையில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு,
கைது செய்து சிறையில் அடைப்பது,
தொடர்ந்து இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்பு
சட்டத்தில் கைது
செய்து சிறையில் அடைக்க
வேண்டும்.

கஞ்சா
மற்றும் குட்கா
கடத்தல், பதுக்கல், விற்பனை
சங்கிலியை உடைக்க மொத்தக் கொள்முதல், விற்பனை
செய்யும் நபர்கள் மீது
கைது நடவடிக்கை மேற்கொள்ள
வேண்டும். கஞ்சா,
குட்கா, லாட்டரி பழக்கத்துக்கு அடிமையான மாணவர்களை அடையாளம் கண்டு
மனநல ஆலோசகர் மூலம் அவர்களை
இப்பழக்கத்திலிருந்து மீட்க
வேண்டும்.

பள்ளி
மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் குடியிருப்பவர்களை கொண்டு காவல் ஆய்வாளர் வாட்ஸாப் குழுக்களை
உருவாக்கி, இரகசியத் தகவல் சேகரித்து
விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க
வேண்டும் என
கடந்த 8-ம் தேதி
டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
பிறப்பித்திருந்தார்.

அவருடைய
உத்தரவைப் பின்பற்றி தமிழகம்
முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கண்காணிப்பாளர்கள், காவல்துறையினர் என அனைவரும் தீவிரமாக
சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான கஞ்சா,
குட்கா போன்றவற்றை விற்பனை
செய்யும் நபர்கள் குறித்து
பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல்
தெரிவிக்க வேண்டும் எனவும்
அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் வருண்குமார் போதை பொருட்கள் விற்பனை
செய்யும் நபர்கள் குறித்து
தகவல் தெரிவித்தால் ரூபாய்
10
ஆயிரம் பரிசு தொகை
வழங்கப்படும் என
தெரிவித்துள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் 6379904848 என்கின்ற
வாட்ஸ்அப் எண் மூலம்
தகவல் தெரிவிக்க வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular