சென்னை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வரும் டிசம்பரில் வெளியாக உள்ளது.
இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், இம்மாதம் 21ம் தேதி துவங்குகிறது.
பயிற்சியில் சேர, https://forms.gle/rnAmQdHPf2UJwp5e8 என்ற இணைய தள பக்கத்தில் விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு, 94999 66021, 044- 2250 1032 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.