விவசாயிகளுக்கு மானியத்தில் மின் மோட்டார் – விருதுநகர்
விருதுநகர் கலெக்டர் தகவல்:
வேளாண்
பொறியியல் துறை மூலம்
இறைப்பு திறன் குறைந்த
பழைய மின்மோட்டார்களுக்கு பதிலாக
புதிய மோட்டார்கள் மற்றும்
புதிதாக மின்மோட்டார்கள் நிறுவ
விரும்பும் சிறு, குறு
விவசாயிகளுக்கு மானியமாக
ரூ.10ஆயிரம் வீதம்
31 பேருக்கு வழங்க ரூ.3.10லட்சம்
நிதி வழங்கப்பட உள்ளது.
விருதுநகர்,காரியாபட்டி, அருப்புக்கோட்டை, திருச்சுழி மற்றும் நரிக்குடி
வட்டார விவசாயிகள் கலெக்டர்
அலுவலக வளாகத்தில் உள்ள
உதவி செயற்பொறியாளர், வேளாண்
பொறியியல் துறையை அணுகலாம்.
திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு, சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர்
வட்டார விவசாயிகள் உதவி
செயற்பொறியாளர், வேளாண்
பொறியியல் துறை, திருவில்லிபுத்தூரை அணுகலாம். அல்லது
https://mis.aed.tn.gov.in என்ற
இணையதளத்தில் பதிவு
செய்து முன்னுரிமைப்படி பின்னேற்பு மானியம் பெறலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

