HomeBlogமாற்றுத்திறனாளிகளுக்கான பிரெய்லி ரீடர் கருவி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகளுக்கான பிரெய்லி ரீடர் கருவி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகளுக்கான பிரெய்லி
ரீடர் கருவி பெற
விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகளுக்கான பிரெய்லிரீடர் கருவி
பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக
தேனி கலெக்டர் முரளீதரன்
அறிவித்துள்ளார்.

தேனி
மாவட்டத்தில் இளநிலை,
முதுநிலை கல்வி பயின்ற
மாணவர்கள்,ஆசிரியர் தகுதி
தேர்வு, டி.என்.பி.எஸ்.சி.,
போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி
பெறும் பார்வைக்குறைபாடு உடைய
மாற்றுத்திறனாளிகள் எளிதில்
பிரெய்லி முறையில் படிக்க
மின்னனு வடிவிலான புக்
தொடுஉணர்வுடன் வாசிக்கும் கருவி (எலக்ட்ரானிக் பிரெய்லி
ரீடர்) வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற பிரெய்லி முறையில்
கல்வி பயின்றுள்ள பார்வை
குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்கு உரிய
தேசிய அடையாள அட்டை
நகல், ரேஷன் கார்டு,
ஆதார் நகல், பயிற்சி
பெறும் நிறுவனத்தில் சான்று
மற்றும் போட்டோவுன் பிப்.
11
ம் தேதிக்குள் மாவட்ட
மாற்றுத்திறனாளிகள் நல
அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 04546- 252 085 என்ற போனில்
தொடர்பு கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular