HomeBlogமே 21ம் தேதி முதுநிலை நீட் நுழைவு தேர்வு

மே 21ம் தேதி முதுநிலை நீட் நுழைவு தேர்வு

மே 21ம்
தேதி முதுநிலை நீட்
நுழைவு தேர்வு

எம்.டி.,
எம்.எஸ்., உள்ளிட்ட
மருத்துவ முதுநிலை படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு,
ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தேர்வை, மத்திய
சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய மருத்துவ
தேர்வுகள் வாரியம் நடத்தி
வருகிறது.

இந்த
ஆண்டின், முதுநிலை படிப்பிற்கான நீட் தேர்வு, மார்ச்
12
ம் தேதி நடத்த
திட்டமிடப்பட்டிருந்தது.இதற்கிடையே, இந்த தேர்வை ஒத்திவைக்கக்கோரி எம்.பி.பி.எஸ்.,
பட்டதாரிகள் ஆறு பேர்,
உச்ச நீதிமன்றத்தில் மனு
தாக்கல் செய்தனர்.

அதில்,
எங்களுக்கு இன்டர்ன்ஷிப் எனப்படும்
பயிற்சியை நிறைவு செய்வது
கட்டாயம்; அந்த பயிற்சி
இன்னும் முடிவடையாததால், முதுநிலை
படிப்பிற்கான நீட்
தேர்வை எங்களால் எழுத
இயலாது என, அவர்கள்
தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தொடர் கோரிக்கைகள் வந்ததை
அடுத்து, முதுநிலை படிப்பிற்கான நீட் தேர்வை ஒத்திவைக்க, மத்திய சுகாதாரத் துறை
முடிவு செய்தது. மார்ச்
12
ம் தேதி நடக்கவிருந்த அந்த தேர்வு, மே
21
ம் தேதி நடக்கும்
என, அறிவிக்கப்பட்டது.அன்று
காலை, 9.00 முதல் பகல்
12.30
மணி வரை தேர்வு
நடக்க உள்ளது. தேர்வுக்கு மார்ச் 15 வரை விண்ணப்பிக்கலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular