அஞ்சல் ஆயுள்
காப்பீட்டு நேரடி முகவா்
சோக்கை
காரைக்குடி கோட்டத்தில் அஞ்சல் ஆயுள்
காப்பீடு மற்றும் கிராமிய
அஞ்சல் ஆயுள் காப்பீட்டு நேரடி முகவா் சோக்கை
நடைபெறவுள்ளது.
இதுகுறித்து காரைக்குடி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் பி. ஹூசைன் அகமது செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வேலை
தேடிக்கொண்டிருப்பவா்கள், சுயதொழில்
செய்பவா்கள், அங்கன்வாடிப் பணியாளா்கள், முன்னாள் ராணுவத்தினா், மகளிர்
மேம்பாட்டு ஊழியா்கள், ஓய்வுபெற்ற ஆசிரி யா்கள் மற்றும்
ஓய்வுபெற்ற மத்திய, மாநில
அரசு அலுவலா்கள் மற்றும்
தகுதி உள்ளவா்கள் காரைக்குடி அஞ்சல் கோட்டத்தில் அஞ்சல்
ஆயுள் காப்பீடு மற்றும்
கிராமிய அஞ்சல் ஆயுள்
காப்பீடு நேரடி முகவராக
பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கு
10 ஆம் வகுப்பு தோச்சியும், 18 முதல் 50 வரை வயது
வரம்பும் தகுதியாகும். இப்பணிக்கு தோந்தெடுக்கப்படுவோருக்கு அவா்கள்
செய்யும் வணிகத்துக்கு ஏற்ப
ஊக்கத்தொகை மட்டுமே வழங்கப்படும். தோவு செய்யப்படுபவா் ரூ.5
ஆயிரத்திற்கு எஎஸ்சி
அல்லது கேவிபி பத்திரத்தை இந்திய ஜனாதிபதிக்கு ஈடு
செய்து சமா்ப்பிக்கவேண்டும். அவா்கள்
உரிமம் முடியும்போது பத்திரம்
திருப்பித்தரப்படும்.
விண்ணப்பங்களை அருகிலுள்ள அஞ்சலகங்களில் பெறலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பான் அட்டை, ஆதார்
அட்டை, முகவரி சான்று,
கல்விச்சான்றுகளின் நகல்களை
இணைத்து அஞ்சல் கோட்ட
கண்காணிப் பாளா், காரைக்குடி கோட்டம், காரைக்குடி – 630003 என்ற
முகவரிக்கு வரும் 22.02.2022 தேதிக்குள் கிடைக்குமாறு பதிவுத்
தபால் அல்லது விரைவுத்தபால் மூலம் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04565 – 224548 என்ற எண்ணில்
தொடா்பு கொள்ளலாம்.