இளநிலை எழுத்தா் பணிக்கான அனுமதி சீட்டை தேர்வா்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று புதுச்சேரி அரசு பணியாளா், நிா்வாக சீா்த்திருத்தத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீா்த்திருத்தத் துறை சாா்பு செயலா் ஜெய்சங்கா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி பணியாளா், நிா்வாக சீா்திருத்தத் துறையின் இளநிலை எழுத்தா், பண்டக காப்பாளா் நிலை-3 பணியிடங்களை நிரப்புவதற்கான பொது எழுத்துத் தேர்வு ஆக. 27-ஆம்தேதி புதுச்சேரியில் 107 தேர்வு மையங்களிலும், காரைக்காலில் 14 மையங்களிலும், மாஹேவில் 6 மையங்களிலும், ஏனாமில் 10 மையங்களிலும் நடைபெறவுள்ளது.
இத்தேர்வுக்கான அனுமதி சீட்டை அதிகாரப்பூா்வ இணையதளத்தில் ஆக. 17 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது தொடா்பான விவரங்களுக்கு 0413-2233338 என்ற தொலைபேசி எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.